சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
அதானி விவகாரம்: இந்திய உதவியை கோரும் அமெரிக்கா
தொழிலதிபர் கெளதம் அதானி மீதான ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு இந்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் உதவியை கோரியுள்ளதாக நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாக, கடந்த ஆண்டு நவம்பம் மாதம் அமெரிக்காவின் நியூயாா்க் நீதிமன்றத்தில் கெளதம் அதானி மற்றும் அவரின் உறவினா் சாகா் அதானி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சூரிய மின்சக்தியை விநியோகிப்பதற்கான திட்டங்களுக்கு அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை அதானி குழுமம் திரட்டியது. இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கு சுமாா் ரூ.2,000 கோடிக்கு மேல் லஞ்சம் வழங்கப்பட்டது அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களிடம் மறைக்கப்பட்டு மோசடி நிகழ்ந்துள்ளது.’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதில், வெளிநாடு லஞ்ச முறைகேடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ‘இந்திய தொழிலதிபா் கெளதம் அதானிக்கு சொந்தமான அதானி க்ரீன் நிறுவனம், தில்லியை தலைமையிடமாக கொண்ட அஷ்யூா் பவா் நிறுவனம் மீது அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாதுகாப்பு அமைப்பு இரு வழக்குகளைத் தொடுத்துள்ளது.
இந்த வழக்கில் தொழிலதிபர் கெளதன் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
தலைமைத் தோ்தல் ஆணையராக ஞானேஷ் குமாா் பதவியேற்பு
இதனிடையே நீதித்துறை செயல்திறனை மேம்படுத்தும் நோக்கிலும், மூன்று வழக்குகள் வெவ்வேறு அமர்வில் விசாரிக்கப்படும் பட்சத்தில் விசாரணை தேதிகளில் முரண்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே நீதிபதி அமர்வுக்கு மாற்றி நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து வழக்குகளையும் மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் ஜி கராஃபிஸ் விசாரிப்பார் என்றும் அனைத்து வழக்குகளும் தனித்தனியே விசாரிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தொழிலதிபர் கெளதம் அதானி மற்றும் அவரின் உறவினா் சாகா் அதானி உள்ளிட்டோர் மீதான ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு இந்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் உதவியை கோரியுள்ளதாக செவ்வாய்க்கிழமை (பிப். 18) நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் கௌதம் அதானி, உறவினர் சாகர் அதானி மீதான விசாரணையை தொடர தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதானி கிரீன் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றமும், அமெரிக்க பங்கு பரிவர்த்தனை பாதுகாப்பு ஆணையமும் பதிவு செய்திருக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை "ஆதாரமற்றவை" என மறுத்துள்ளது அதானி குழுமம், "சாத்தியமான அனைத்து சட்டப்பூர்வ உதவிகளையும் நாடுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.