IPL 2025 : 'பாதியில் நிறுத்தப்படுகிறதா ஐ.பி.எல் தொடர்?' - புதிய அப்டேட்!
அதிக விக்கெட்டுகள்: முதலிடத்தில் இருக்கும் பிரசித் கிருஷ்ணாவை சமன்செய்த சிஎஸ்கே வீரர்!
சிஎஸ்கே வீரர் நூர் அகமது அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் பிரசித் கிருஷ்ணாவை சமன்செய்துள்ளார்.
கொல்கத்தாவில் ஈடர்ன் கார்டன்ஸ் திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே சார்பாக நூர் அகமது (20 வயது) 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். கடைசியில் ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.
இந்த சீசனில் சிஎஸ்கே வென்ற 3 போட்டிகளில் 2 போட்டிகளில் நூர் அகமது ஆட்ட நாயகன் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆட்ட நாயகன் விருதை தோனி வாங்கினார். அப்போதும் தோனி நூர்தான் சிறப்பாக பந்துவீசினார் அவருக்கு கொடுத்திருக்கலாம் எனக் கூறியிருந்தார்.
ஐபிஎல் 2025-இல் அதிக விக்கெட்டுகள்
1. பிரசித் கிருஷ்ணா - 20 விக்கெட்டுகள் (குஜராத்)
2. நூர் அகமது - 20 விக்கெட்டுகள் (சிஎஸ்கே)
3. ஜாஷ் ஜேசில்வுட் - 18 விக்கெட்டுகள் (ஆர்சிபி)
4. டிரெண்ட் போல்ட் - 18 விக்கெட்டுகள் (மும்பை)
5. வருண் சக்கரவர்த்தி - 17 விக்கெட்டுகள் (கொல்கத்தா)
பிரசித் கிருஷ்ணா, நூர் அகமது இருவரும் 20 விக்கெட்டுகள் எடுத்தாலும் எகானமியில் குறைவாக இருப்பதால் பிரசித் கிருஷ்ணா முதலிடத்தில் இருக்கிறார்.