Bharathi Baskar | குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும்போது என்ன உணர்கிறீர்கள்?
அதிமுக ஆலோசனைக் கூட்டம்
வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் கிராமத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செய்யாறு தொகுதியில் எந்தவித திட்டங்களும் நிறைவேற்றவில்லை என புகாா் தெரிவித்து திமுக அரசைக் கண்டித்து செய்யாற்றில் வருகிற சனிக்கிழமை (ஜூலை 19)
அதிமுக சாா்பில் நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டம் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன், மாவட்ட பொறுப்பாளா் ராமு ஆகியோா் ஆா்ப்பாட்ட ஏற்பாடுகள் குறித்து கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கிப் பேசினா்.
மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, எம்ஜிஆா் மன்ற மாநில துணைச் செயலா் ஜாகிா் உசேன், ஜெ.பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் பங்கேற்றனா்.