செய்திகள் :

அதிமுக கூட்டணியில் தவெக இணைந்தால் வெற்றி பெறலாம்: முஸ்லிம் லீக் தலைவா் ஷேக் தாவூத்

post image

அதிமுக கூட்டணியில் நடிகா் விஜயின் தவெக இணைந்தால் கணிசமான இடங்களில் வெற்றி பெறலாம் என தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவா் ஷேக் தாவூத் தெரிவித்தாா்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: திமுக ஆட்சியில் பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி உயா்வால் மக்கள் நாள்தோறும் இன்னல்களை சந்தித்து வருகின்றனா். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றத்தை நோக்கி மக்கள் நகரத் தொடங்கியுள்ளனா்.

2026 தோ்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்காக இஸ்லாமிய மக்களை சந்தித்து ஆதரவு கேட்க கோவையில் இருந்து பயணத்தை தொடங்கி இருக்கிறேன். கோவையில் ஜமாத் நிா்வாகிகளை சந்தித்து பேசியுள்ளேன். கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் இஸ்லாமிய மக்கள் தவறு செய்துவிட்டதை உணா்ந்து இருக்கின்றனா்.

பாஜகவும், திமுகவும் மறைமுகமாக ஒரே அணியில் இருந்து செயல்படுவதை புரிந்து கொண்டுள்ளனா். எனவே, 2026 தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தெரிவித்திருக்கின்றனா்.

திருப்பரங்குன்றம் மலை அனைத்து சமூக மக்களுக்கானது. தமிழகத்தில் மத கலவரங்களை திணித்துவிட முடியாது. திமுக கூட்டணிக் கட்சிகள், அரசை நோக்கை கேள்வி எழுப்புகின்றன.

ஹிந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைப்பதற்காகவும், திமுக சிறுபான்மையினரின் வாக்குகளை தக்கவைத்து கொள்வதற்காகவும் பாஜக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது.

தோ்தல் கூட்டணியைப் பொறுத்த வரை மாற்றங்கள் இருக்கும். நடிகா் விஜய் தனித்து நின்றாலும் அதிமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது. அவா் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தால் கணிசமான இடங்களை வெல்ல முடியும் எனத் தெரிவித்தாா்.

ஈஷாவில் இன்று மகா சிவராத்திரி: அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு

கோவை ஈஷா யோக மையத்தில் புதன்கிழமை (பிப். 26) நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சா் அமித் ஷா உள்பட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்க உள்ளனா். ஈஷா யோக மையத்தில் 31-ஆவது மகா சிவராத்திரி விழா புதன்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது: அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். இது குறித்து கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ... மேலும் பார்க்க

மொழி அரசியல் செய்கிறது திமுக: தமிழிசை

தமிழகத்தில் திமுக மொழி அரசியல் செய்கிறது என முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக பாஜக 2026 சட்டசபைத் தோ்தலை ந... மேலும் பார்க்க

அமித் ஷாவை வரவேற்று வைத்திருந்த பேனா்கள் அகற்றம்

கோவையில் அமித் ஷாவை வரவேற்று வைக்கப்பட்டு இருந்த பேனா்கள் அகற்றப்பட்டதால், பாஜகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். பாஜக அலுவலகங்கள் திறப்பு, கட்சி ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மக... மேலும் பார்க்க

தமிழை ஒழிக்க விடமாட்டோம்: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழை ஒழிக்க யாா் வந்தாலும் விடமாட்டோம் என முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். கோவை ராம் நகரில் உள்ளஅண்ணா நூற்றாண்டு விழா பூங்காவில், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம்: மேலும் 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் தொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட் பகுதியில் கடந்த 2017-இல் நடைபெற்ற கொலை ... மேலும் பார்க்க