உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: எம்.ஏ.பேபி விமா்சனம்
சென்னை: அதிமுக, பாஜக, கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சித்தாா்.
முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எம்.ஏ. பேபி அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டியில்,
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு மக்கள் மிகப் பெரிய ஆதரவை அளித்துவருகிறார்கள். மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு மக்களின் ஆதரவோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முதல்வா் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பின் போது, மதவாத சக்திகளுக்கு கடும் பதிலடி கொடுக்க ஜனநாயக மதச்சாா்பற்ற, முற்போக்கு அரசியல் சக்திகளின் தலைமையில் தமிழ்நாட்டு மக்களை ஒருங்கிணைத்துள்ளது குறித்தும், அதை வலுவாக கட்டியெழுப்புவதில் திமுகவின் பங்களிப்பு குறித்தும் பேசினோம்.
தற்போது, பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது.
பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-இன் வழிகாட்டுதலின்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டில் மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் உரிமை, ஜனநாயக உரிமைகளை திட்டமிட்டு சீர்குலைத்துவருவதை நாம் பார்த்து வருகிறோம்.
வக்ஃப் திருத்த மசோதாவை, பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது, சிறுபான்மையினர் உரிமைகள் எவ்வாறு தாக்கப்படுகின்றன என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஆகும்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் உங்களுக்கான வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!
நாடாளுமன்றத்தில் இந்த வக்ஃப் மசோதாவுக்கு எதிராக அதிமுக வாக்களித்தது. அதே நேரத்தில், அவர்கள் பாஜக-வுடன் சேர்ந்தது சிறுபான்மையினருக்கு எதிரானதாகும்.
இப்போது உச்ச நீதிமன்றம் இந்த வக்ஃப் சட்டத்தைப் பற்றி,கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளது.
வக்ஃப் சட்டத்தின் பல விதிகள் சிறுபான்மையினருக்கு அரசியல் சாசன உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக உள்ளது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
அதேபோல், உச்சநீதிமன்றம், ஆளுநர் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்று மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக தீா்ப்பை சட்டப் போராட்டம் மூலம் பெற்றுத்தந்த தமிழக முதல்வருக்கு வாழ்த்துகள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மாநில அரசுகளின் உரிமைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மிக முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிருக்கிறது.
எனவே, நாங்கள் நட்பு ரீதியாக பல விஷயங்களை விவாதித்தோம். மேலும், ஓராண்டுக்குள் சட்டப் பேரவைத் தோ்தல் வரும் நிலையில் தமிழ்நாட்டில் முற்போக்கு மதச்சாா்பற்ற ஜனநாயக சக்திகள் இணைந்து தோ்தலை எதிா்கொள்வது என்றும் முடிவெடுத்துள்ளோம்.
மேலும், இந்த அணி ஒட்டுமொத்த நாட்டுக்கே முன்மாதிரியாக இருக்கும். இதில் பல கட்சிகளும் சோ்ந்து மேலும் பலமாக இருக்கும். திமுக தலைமையிலான அணிக்கு மக்களும் ஆதரவளித்து கூடுதல் வலுசோ்ப்பாா்கள் என்று நம்புகிறோம் என்றாா் எம்.ஏ.பேபி.