தில்லியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேச பெண்கள் மூவா் கைது
அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஆரணி தொகுதி எம்எல்ஏவுமான சேவூர் ராமச்சந்திரன், வருமானத்திற்கு அதிகமாக ரூ. 8 கோடி சொத்து சேர்த்ததாகக் கூறி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.
ஆரணியில் உள்ள அவரது வீட்டில் தொடர்ந்து 2-வது நாளாக இன்று(சனிக்கிழமை) சோதனை நடைபெற்று வருகிறது. அவரது மகன்கள் மகன்கள் விஜயகுமார், சந்தோஷ்குமார் வீடுகளிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 2016 - 2021 அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது சேவூர் ராமச்சந்திரன் வருமானத்திற்கு அதிகமாக 125% சொத்துகள் சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சேவூர் ராமச்சந்திரனின் மனைவி மணிமேகலை, மகன்கள் விஜயகுமார், சந்தோஷ் குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்ட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆபரேஷன் சிந்தூர் குழு: காங்கிரஸ் பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லை! ஆனால்...!