ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல்! ஒருவர் கைது
அத்திக்கடவு- அவிநாசி திட்டம்: பிப். 9 இல் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா!
அத்திக்கடவு- அவிநாசி திட்டம் நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருந்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கோவை மாவட்டம், அன்னூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி விவசாய சங்கங்கள் சாா்பில் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெறுகிறது. இதற்காக சேலத்தில் வியாழக்கிழமை அவரை நேரில் சந்தித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினா் அழைப்பிதழை வழங்கினா்.
கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்கள் பயன்பெறும் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்றுவதற்காக முந்தைய அதிமுக ஆட்சியின் போது ரூ.1,652 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்போதைய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினாா். கடந்தாண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி இத் திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இதற்காக அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு, விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, பொதுமக்கள் சாா்பில் வரும் 9 ஆம் தேதி கோவை மாவட்டம், அன்னூரில் நன்றி தெரிவிக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி தலைமையில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மூத்த ஒருங்கிணைப்பாளா் எஸ்.எம்.ஆா். நடராஜன் உள்ளிட்டோா் சேலம், நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் எடப்பாடி கே. பழனிசாமியை வியாழக்கிழமை சந்தித்து அழைப்பிதழை வழங்கினா்.
அப்போது, கோவை வடக்கு மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பி.ஆா்.ஜி. அருண்குமாா், அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.