செய்திகள் :

`அந்த கார் கலரை எம்.ஜி.ஆர் கலர் என்றே சொல்வார்கள்’ - புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் TMX 4777 கார்

post image

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது பயன்படுத்தி, ஏறக்குறைய கடந்த 25 ஆண்டுகளாக அவரின் நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பாசிடர் கார், தற்போது சி.கே. ஆட்டோமொபைல் பெயிண்டிங் வர்க்ஷாப்பின் துணையுடன் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

1976-ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் அம்பாசிடர் மார்க் 2 மாடல் வெர்டிகோ நீல நிறக் காரை வாங்கினார். அப்போது தொடங்கி அவர் தமிழக முதல்வராக சேவையாற்றிய பத்து ஆண்டுகள் கடந்து அவர் மண்ணுலகில் இருக்கும் வரை இந்த காரை பயன்படுத்தியுள்ளார்.

 எம்.ஜி.ஆரின் TMX 4777 கார்
எம்.ஜி.ஆரின் TMX 4777 கார்

முதல்வராக பல அலுவலகப் பணிகளுக்கும் அவர் இந்தக் காரையே பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. எம்.ஜி.ஆரின் மரணத்திற்குப் பின் 1990களில், சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள அவரது நினைவு இல்லத்தில் பொதுமக்களின் காட்சிக்கு அவரது கார் வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 25 ஆண்டுகளாக நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கார், நிறம் மங்கிப் போனதையடுத்து, சென்னை பட்டினம்பாக்கத்தில் சி.கே. ஆட்டோமொபைல் பெயிண்டிங் வர்க்ஷாப் உரிமையாளரான சந்திரசேகர் மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

1990 களில் தொழிலாளியாக இந்த தொழிலுக்கு வந்த சந்திரசேகர் 2008 - ஆம் ஆண்டு சொந்தமாக சி.கே. வர்க்ஷாப்பை தொடங்கியுள்ளார். பல பிரபலங்கள் இவரின் வர்க்ஷாப்பில் தங்கள் கார்களை புதுப்பிக்க ஓட்டுனர்கள் மூலமும் இடைத்தரகர்கள் மூலமும் அணுகி புதுப்பித்திருப்பதாக கூறுகிறார் சந்திரசேகர்.

 எம்.ஜி.ஆரின் TMX 4777 கார்
எம்.ஜி.ஆரின் TMX 4777 கார்
 எம்.ஜி.ஆரின் TMX 4777 கார்
எம்.ஜி.ஆரின் TMX 4777 கார்
 எம்.ஜி.ஆரின் TMX 4777 கார்
எம்.ஜி.ஆரின் TMX 4777 கார்
 எம்.ஜி.ஆரின் TMX 4777 கார்
எம்.ஜி.ஆரின் TMX 4777 கார்

எம்.ஜி.ஆர் பயன்படுத்திய காரை புதுப்பிக்கும் அனுபவத்தைப் பற்றி சந்திரசேகர், "எவ்வளவோ கார்களை புதுப்பித்திருந்தாலும், எம்.ஜி.ஆர் பயன்படுத்திய காரை புதுப்பித்தது மட்டற்ற மகிழ்ச்சியையும் மனதிருப்தியையும் அளித்தது. இதில் என்னோடு சேர்ந்து உழைத்த அனைவரும், அர்ப்பணிப்புடன் வேலை செய்தார்கள்" என்று கூறினார்.

மேலும் இந்தக் கார் புதுப்பிப்பில் அவர் சந்தித்த சவால்களை பற்றி கேட்டபோது, " கடந்த இரண்டரை மாதங்களாக இந்தக் காரை புதுப்பிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தோம், பொதுவாகக் கார்களை புதுப்பிப்பது இவ்வளவு நாள் பிடிக்காது. ஆனால் இது மிகவும் பழைய காராக இருந்தது. இதற்கு முன்பு எத்தனை முறை பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்கிறதென்று நமக்குத் தெரியாது. பொதுவாகக் கார்கள் புதுப்பிக்கப்படும்போது தின்னர் என்று ஒரு திரவம் பயன்படுத்தப்படும். ஆனால் இவ்வளவு பழைய காரில் அந்தத் திரவம் பயன்படுத்தும்போது பெயின்டில் வெடிப்புகள் ஏற்பட்டுக் கொப்பளிக்கும். அதனால் நாங்கள் ஒவ்வொருமுறையும் பெயின்டைக் காய விட்டு மிகவும் பொறுமையாகக் கையாளவேண்டியதாக இருந்ததுதான் இரண்டரை மாதங்கள் பிடித்ததற்குக் காரணம்.

ஆனாலும், இன்னும் பதினைந்து வருடமாவது தாக்குப்பிடிக்கக்கூடிய அளவுத் தரமாகவே புதுப்பித்திருக்கிறோம்" என்றார்.

 எம்.ஜி.ஆரின் TMX 4777 கார்
எம்.ஜி.ஆரின் TMX 4777 கார்

கூடுதலாக எம்.ஜி.ஆரின் காருக்கு அடிக்கப்பட்ட வெர்டிகோ நீலம் மிகவும் பிரபலமான நிறம் என்றும், அதனை எம்.ஜி.ஆர் கலர் என்று தான் அழைப்பார்கள் என்றும் தெரிவித்தார். ரசிகர்கள் பலரும் இந்த நிறத்தைத் தங்கள் கார்களுக்கு அடித்துக்கொள்வார்கள் என்று கூறியதோடு, "டி.எம் எக்ஸ் 4777" என்ற அந்தக் காரின் பதிவு எண் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்ததாகக் கூறினார்.

நிறைவாக, கடந்த இரண்டரை மாதங்களாக புதுப்பிப்பு பணியில் இருந்த எம்.ஜி.ஆர் பயன்படுத்திய அம்பாசிடர் கார், நேற்றைய தினம் (அக்.23) பணிகள் முடிந்து தியாகராய நகர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

- கோகுல் சரண்

நேரு ஸ்டேடியம் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சத்தை வழங்கிய டேனி ஷெல்டர்ஸ் & சேயோன் சாரிட்டபிள் டிரஸ்ட்

நேரு ஸ்டேடியம் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சத்தை வழங்கிய டேனி ஷெல்டர்ஸ் மற்றும் சேயோன் சாரிட்டபிள் டிரஸ்ட்சமூக நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டில் தனது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், டேனி ஷெல்... மேலும் பார்க்க

அப்போலோ: தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக லீட்லெஸ் டூயல் சேம்பர் ஏவிஇஐஆர் பேஸ்மேக்கர் சிகிச்சை

சென்னை அப்போலோ மருத்துவமனை, தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக லீட்லெஸ் டூயல் சேம்பர் ஏவிஇஐஆர் பேஸ்மேக்கர் பொருத்தும் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது!சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை ... மேலும் பார்க்க

எவரெஸ்ட் 'Death Zone'-ல் தவித்த ஆஸ்திரேலியப் பெண் - உடல் சொல்வதை அலட்சியப்படுத்தாதீர்!

இலக்கு முக்கியமா? உயிர் முக்கியமா? எவரெஸ்ட் சிகரம் ஒவ்வொரு ஆண்டும் கேட்கும் கேள்வி இதுதான்! ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி பியான்கா அட்லர் (Bianca Adler), இந்த ஆண்டு மே மாதம் அந்தப் பரீட்சைய... மேலும் பார்க்க

சத்தீஷ்கர்: மகளின் ஸ்கூட்டர் கனவு; சாக்குமூட்டையில் சில்லறை; நெகிழ வைத்த விவசாயி

சத்தீஷ்கரில் விவசாயி ஒருவர் தனது மகளின் கனவை நிறைவேற்ற செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அங்குள்ள ஜஸ்பூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பஜ்ரங் ராம். இவரது மகள் சம்பா பகத்.இவர் விவசாயியான தனது த... மேலும் பார்க்க

காசா: போரில் பிறந்த குழந்தைக்கு 'Singapore' எனப் பெயர் - நெகிழ வைக்கும் காரணம்

காசாவில் போருக்கு நடுவே பிறந்த பெண் குழந்தைக்கு 'சிங்கப்பூர்' எனப் பெயர் வைத்துள்ளனர் பாலஸ்தீனிய தம்பதி. இதற்கான காரணம் அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது. சிங்கப்பூர் ஊடகமான Straits Times வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க