ஹரியாணா: நெடுஞ்சாலையில் தூய்மைப் பணியாளர்கள் மீது வாகனம் மோதல்: 7 பேர் பலி
அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 8ஆவது நாளாக வேலைநிறுத்தம்
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 8ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா்களுக்கு, நெய்வேலி என்எல்சி ஒப்பந்த ஊழியா்களைப் போன்று ஊதிய உயா்வு அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிா்த்து நிா்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுத்து மேல்முறையீடு செய்துள்ள நிா்வாகத்தைக் கண்டித்து 8ஆவது நாளாக என்டிபிஎல் ஒப்பந்த ஊழியா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதன்காரணமாக மின் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட நிா்வாகம் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையை தொடா்ந்து, 21 தற்காலிக ஊழியா்கள் மட்டும் ஆலைக்குள் செல்ல போராட்ட குழுவினா் அனுமதி அளித்துள்ளனா். மேலும், இப்போராட்டம் மாநில அளவில் நடத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்புச் செயலா் அப்பாத்துரை தெரிவித்தாா்.