செய்திகள் :

அனிருத் குரலில் ‘கிஸ்’ படத்தின் முதல் பாடல்!

post image

நடிகர் கவின்-ன் புதிய திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

சின்னத் திரை மூலம் பிரபலமாகி வெள்ளித் திரையில் கதாநாயகனாக உயர்ந்தவர் நடிகர் கவின். பிக்பாஸ் மூலம் மற்றொரு பரிமாணத்தை அடைந்த அவர் அதன் பின்னர் நடித்த லிஃப்ட், டாடா,ஸ்டார் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில், அவர் நடித்து வெளியான ’ப்ள்டி பெக்கர்’ திரைப்படத்தை பிரபல இயக்குநர் நெல்சன் தயாரித்திருந்தார். அந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஓடிடி-யில் வெளியான பின்பு மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ராணி ஆகியோரின் நடிப்பில் ‘கிஸ்’ எனும் புதிய படம் உருவாகி வருகின்றது.

ஜென் மார்டின் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ’திருடி’ எனும் முதல் பாடலான பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார். இந்தப் பாடலின் மியூசிக் விடியோ இன்று (ஏப்.30) படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆஷிக் ஏ.ஆர். -ன் பாடல் வரிகளில் மென்மையான காதல் பாடலான ‘திருடி’ ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்பை அதிகரித்துள்ளது.

முன்னதாக, கவின் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் ‘மாஸ்க்’ எனும் மற்றொரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:எஸ்டிஆர் 49! மீண்டும் சிம்பு - சந்தானம் கூட்டணி!

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அஜித் குமார்!

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நடிகர் அஜித் குமார், வீடு திரும்பினார். திடீர் உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அஜித் குமார் இன்று... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் முனோட்ட விடியோ!

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிம்ரன், ய... மேலும் பார்க்க

பிரேமலு பிரபலங்கள் நிறைந்த ’ப்ரோமான்ஸ்’-ன் ஓடிடி வெளியீடு!

‘ப்ரோமான்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.இயக்குநர் அருண் டி. ஜோஸ் இயக்கத்தில் நடிகர்கள் மேத்யூ தாமஸ், அர்ஜுன் அசோகன், சங்கீத் பிரதாப், ஷியாம் மோஹன் மற்றும் மஹிமா ந... மேலும் பார்க்க

ஒசாகா திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகராக அஜித், லியோ படத்துக்கு 6 விருதுகள்!

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் அஜித், த்ரிஷாவுக்கு சிறந்த நடிகர், நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2005ஆம் ஆண்டுமுதல் விருதுகளை வழங்கி வருகின்றன. தற்போத... மேலும் பார்க்க