Chennai-ன் முதல் Cinema screening | Victoria Hall-ன் கதை | Vikatan
அனுபமாவின் பரதா படத்திற்கு சாய் பல்லவி வாழ்த்து..! தொடரும் பிரேமம்!
நடிகை சாய் பல்லவி அனுபமாவின் பரதா படத்திற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கொடி படத்தில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார்.
பிரபலமான இயக்குநர் பிரவீன் கந்த்ரெகுலா இயக்கியுள்ள பரதா படத்தின் டீசர் வெளியானது.
இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் முக்கியக் கதாபாத்திரமாக நடிகை சங்கீதா, ஜெய ஜெய ஜெய ஜெய ஹே பட நடிகை தர்ஷனா ராஜேந்திரனும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
பெண்களின் மீதான அடக்குமுறை குறித்து இந்தப் படம் உருவாகியுள்ளது.
ஆனந்த மீடியா தயாரிப்பில் இந்தப் படம் இன்றுமுதல் திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில், இது குறித்து நடிகை சாய் பல்லவி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கூறியதாவது:
உன்னுடைய (அனுபமா) மிகப்பெரிய நாளில் நான் எனது காதலையும் இறுக்கமான அணைப்பையும் அனுப்புகிறேன். எனது அருமையானவளே, உனக்கு எல்லாமும் நல்லதாகவே நடக்க வேண்டும்.
பரதா படம் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். படக்குழுவுக்கு எனது நெஞ்சார்த்த வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.
பிரேமம் படத்தில் தொடர்ந்த இவர்களது நட்பு இன்றளவும் தொடர்கிறது. சாய் பல்லவி மிகப்பெரிய நடிகையாக வளர்ந்துவிட்ட நிலையில், அனுபமா நாயகியாக நடிக்கும் இந்தப் படம் சினிமா வாழ்க்கையில் அவருக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
