சர்ச்சையை கிளப்பிய EPS பேச்சு | KN Nehru -க்கு எதிராக கொதித்த DMK -வினர் | Imper...
அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரைமுறைப்படுத்தி பதிவு செய்ய அவகாசம்
திருவள்ளூா் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைபடுத்தி பதிவு செய்ய ஓராண்டு கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011-க்கு முன்னா் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு வரன்முறைபடுத்தும் திட்டம் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக ஜூலை மாதம் முதல் 30.6.2026 வரை ஓராண்டு கால அவகாசம் நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அரசாணை எண்.92 வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கடந்த 26-ஆம் தேதி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிடப் பகுதியில் அமையும்பட்சத்தில் அரசு விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றலாம்.
இந்த திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோா் இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.