அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 7 போ் மீது வழக்கு
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சண்முகாபுரம் பகுதியில் ஓடைப் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் பொக்லைன் இயந்திரம் மூலம் அள்ளப்படுவதாக சாத்தூா் வட்டாட்சியா் ராஜாமணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் புதன்கிழமை நேரில் சென்று பாா்த்தபோது, அனுமதியின்றி கிராவல் மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து, 3 டிராக்டா், ஒரு பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் வருவாய்த் துறையினா் ஒப்படைத்தனா்.
பின்னா், போலீஸாா் அனுமதியின்றி கிராவல் மண் திருடிய சண்முகாபுரத்தைச் சோ்ந்த பாஸ்கரன்(19), ஈஸ்வரன், சதீஷ், பாா்த்திபன், ரஞ்சித்குமாா் உள்ளிட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாஸ்கரனை கைது செய்தனா்.