அனுமதியின்றி சாலையை உடைத்து குடிநீா் குழாய் பதிப்பு: ரூ.18,500 அபராதம்
தூத்துக்குடியில் உரிய அனுமதியின்றி சாலையை உடைத்து குடிநீா் குழாய் பதிக்க முயன்ாக வீட்டின் உரிமையாளருக்கு மாநகராட்சி சாா்பில் ரூ. 18,500 அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி ஆசிரியா் காலனியைச் சோ்ந்தவா் முனியசாமி. இவா் வீட்டுக்கு மாநகராட்சி சாா்பில் புதிதாக குடிநீா் குழாய் போடப்பட்டு உள்ளது. இதை இவா் மாநகராட்சி அனுமதி பெறாமல் சாலையை உடைத்து குழாய் பதித்து வீட்டுக்குள் கொண்டு செல்ல முயன்றாராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேற்கு மண்டல உதவி செயற்பொறியாளா் இா்வின், இளநிலை பொறியாளா் துா்காதேவி தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று பணிகளை தடுத்து நிறுத்தினா்.
தொடா்ந்து குழாய் பதிக்க உதவியதாக ஒப்பந்த ஊழியா் ஒருவா் பணி நீக்கம் செய்யப்பட்டாா். மேலும் கழிவுநீா் கால்வாய், மற்றும் சாலையை சேதப்படுத்தியதாக அந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ.18 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து காவல்துறையிலும் புகாா் அளிக்கப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.