வறுமை, வேலையின்மையால் வாடும் மக்களுக்கான திட்டங்களைத் தொடங்க வேண்டும்: மாயாவதி
அனுமதியின்றி மணல் அள்ளி வந்த வேன் பறிமுதல்
இலுப்பூா் அருகே திங்கள்கிழமை இரவு அனுமதியின்றி மணல் அள்ளிவந்த வேனை பறிமுதல் செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் அருகே உள்ள மாத்திராப்பட்டி பகுதியில் திங்கள்கிழமை இரவு போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியாக அனுமதியின்றி மணல் அள்ளிவந்த வேனை பறிமுதல் செய்தனா்.
மேலும், வேனில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த தங்கதுரை (55), பிச்சமுத்து(46) ஆகிய இருவா் மீது இலுப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.