செய்திகள் :

அனுராக் காஷ்யப்: "விவாகரத்து செய்ய இதுதான் காரணம்" - முன்னாள் மனைவி கல்கி கோச்லின் ஓபன் டாக்

post image

'Dev.D', 'Gangs of Wasseypur', 'Black Friday' போன்ற திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவின் கவனம் ஈர்த்தவர் அனுராக் காஷ்யப். Dev.D படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை கல்கி கோச்லினை 2011ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

புதுச்சேரியில் பிறந்த கல்கி பிரெஞ்சு-இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். திருமணமான 2 ஆண்டுகளிலேயே இருவருக்குமிடையேயான கருத்து மோதல்களால் 2015ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றனர்.

கல்கி, அனுராக் காஷ்யப்
கல்கி, அனுராக் காஷ்யப்

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் அனுராக் உடனான விவாகரத்து குறித்துப் பேசியிருக்கும் நடிகை கல்கி, "என்னுடைய பெற்றோர்கள் மாறி மாறி சண்டை போட்டு இருவரின் வாழ்க்கையையும் அழித்துக் கொண்டனர். இவர்களின் சண்டையால் அப்போது 13 வயதிலிருந்த என்னுடைய வாழ்வும் கேள்விக்குரியதாகியிருந்தது.

பிறகு இருவரும் ஒத்துவரவில்லை என்று என்னுடைய எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பிரிந்து இருவரும் நன்றாக வாழ்ந்தனர். நானும் சண்டைகளைப் பார்க்காமல், என்னுடைய எதிர்கால வாழ்வைப் பார்த்து முன்னேறினேன். என் பெற்றோரின் சண்டைகளும், எனது சிறுவயது மன அழுத்தமும் ஆழமாக என் மனதில் பதிந்துவிட்டன.

கல்கி கோச்லின்
கல்கி கோச்லின்

எனக்குத் திருமணமான கொஞ்ச நாளில் இருவருக்குமிடையேயான சண்டை நாளுக்குநாள் வலுத்தது. என் சிறுவயதின் மன அழுத்தம் நிறைந்த நாள்கள் அப்போது என் கண்முன் வந்துபோனது. எனக்குக் குழந்தை பிறந்தால், இந்தச் சண்டைகளால் அதன் வாழ்வு கேள்விக்குரியதாகிவிடும் என்று மனதில் ஓடியது. இதை மனதில் வைத்துத்தான் நான் விவாகரத்து செய்தேன்" என்று வெளிப்படையாகத் தனது விவாகரத்து குறித்துப் பேசியிருக்கிறார் கல்கி.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

'என்னால் 12 மணிநேர ஷிஃப்ட்டில் பணிபுரிய முடியும், ஆனால்...'- தீபிகா படுகோன் குறித்து வித்யா பாலன்

8 மணி நேர வேலை காரணமாக சந்தீப் வங்காவின் 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து தீபிகா படுகோன் வெளியேறி இருந்தார். அப்போது பாலிவுட்டில் அது பரவலாகப் பேசப்பட்டது. இந்நிலையில் ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பி... மேலும் பார்க்க

SRK: 'கிங்' படப்பிடிப்பு ஒத்திவைப்பு; சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் ஷாருக்கான்; பின்னணி என்ன?

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது மகள் சுஹானா கான் நடிக்கும் கிங் படத்தில் பிரதான வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் கடந்த மே மாதத்திலிருந்து தொடங்கி நடந்து வருகிறது. மும்பை படப்பிட... மேலும் பார்க்க

The Hunt: "ஓடிடி தளங்கள் சவாலான கதைகளை படமாக எடுப்பதற்கு சுதந்திரம் கொடுக்கிறது" - இயக்குநர் நாகேஷ்

ராஜீவ் காந்தியின் குண்டு வெடிப்புச் சம்பவத்தை மையப்படுத்தி பாலிவுட் இயக்குநர் நாகேஷ் குக்கூனூர் 'தி ஹன்ட்' வெப் சீரிஸை எடுத்திருக்கிறார். 'ஹைதராபாத் ப்ளூஸ்', 'இக்பால்', 'டொர்' போன்ற பாலிவுட் படைப்புகள... மேலும் பார்க்க

Kiara Advani: "எங்கள் மனம் நிறைந்திருக்கிறது!" - கியாரா, சித்தார்த் தம்பதிக்கு பெண் குழந்தை

சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி இணைக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.எம்.எஸ்.தோனியின் பயோபிக்கில் சாக்ஷியாக நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் கியாரா அத்வானி. தொடர்ந்து `கபீர் சிங்', `ஷேர்ஷ... மேலும் பார்க்க

`60, 70 நாள்கள் வந்தால்போதும் என்றார்கள், ஆனால் இப்போது..!’ - எம்.பி பதவி பற்றி கங்கனா ரனாவத்

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஹிமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி தொகுதியில் இருந்து முதல் முறையாக மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த எம்.பி வேலை தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்று கங்கனா ... மேலும் பார்க்க