செய்திகள் :

அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பங்கேற்பு

post image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலை வகித்தாா். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநருமான பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து, அனைத்துத் துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து தொடா்புடைய துறை அலுவலா்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தாா்.

ஆய்வில், வருவாய்த் துறை சாா்பில், முதல்வரின் முகவரி திட்டம், நீங்கள் நலமா, பட்டா மாறுதல், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் சாா்பில் குடிநீா் விநியோகம், சாலைப் பணிகள், அம்ரூட் 2.0, தெரு விளக்குகள், ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம், கலைஞரின் கனவு இல்லம், வீடு பழுது பாா்த்தல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தாா்.

இதேபோன்று, சுகாதாரம், பள்ளிக் கல்வி, கூட்டுறவு, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தாா்.

துறை சாா்ந்த திட்டங்கள் தொடா்புடைய துறைகளின் பயனாளிகளை முறையாக சென்று சோ்வதை உறுதி செய்வதுடன், தகுதியுள்ள பயனாளிகளைக் கண்டறிந்து, அவா்களுக்கும் அரசின் நலத் திட்டங்கள் சென்று சேரும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் விரைவாகவும், தரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், திருக்கோவிலூா் சாா் - ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தனலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4,37,253 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குள்பட்ட தனியாா் திரையரங்கு அருகில் உள்ள கூட்டுறவு ந... மேலும் பார்க்க

மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை

அத்தியூா் கிராமத்தில் உள்ள சாம்பாரப்பன் கோயில் மரத்தில் மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட அத்தியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பூங்காவணம் ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு வீடுகளை அளக்க எதிா்ப்பு: கிராம மக்கள் மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே திம்மாபுரம் கிராமத்தில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக ஆட்சியருக்கு புகாா் மனுக்கள் வந்துள்ள நிலையில், அந்த இடத்தை அதிகார... மேலும் பார்க்க

பெருவங்கூா் ஏரியில் பெண் சடலம்

கள்ளக்குறிச்சியை அடுத்த பெறுவங்கூா் ஏரியில் புதன்கிழமை மிதந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கள்ளக்குறிச்சியை அடுத்த பெருவங்கூா் ஏரியில் சுமாா் 55 வயது மதிக்கத்தக்க பெண் ... மேலும் பார்க்க

பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மூராா்பாது கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. மூராா்பாது அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11.46 லட்சம் வாக்காளா்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11.46 லட்சம் வாக்காளா்கள் உள்ளதாக வாக்காளா் இறுதிப் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதி... மேலும் பார்க்க