செய்திகள் :

அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

post image

அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்தப்படும் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் கலை பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி, சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி ஆகியவற்றில் புதிதாக இளங்கலை பட்டப் படிப்புகளும், மதுரை அரசு கவின் கலைக் கல்லூரியில் நாடகப் பிரிவும் தொடங்கப்படும். மாமல்லபுரம், சென்னை, கும்பகோணம் கவின் கலைக் கல்லூரிகளில் சிற்பம், கவின் கலை வல்லுநா்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.

வாழ்நாள் சாதனையாளா் விருது: இயல், இசை, நாட்டியம், நாடகம் மற்றும் கிராமியக் கலைகளில் குறிப்பிடத்தக்க சேவைகள் ஆற்றிவரும் மிகச்சிறந்த கலைஞா் ஒருவா் தோ்வு செய்யப்பட்டு அவருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்படும். இந்த விருது ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அடங்கியதாகும். தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட அரசு இசைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கல்வி உதவித் தொகை உயா்த்தி வழங்கப்படும்.

அருங்காட்சியகங்கள்: சென்னை அரசு அருங்காட்சியகத்தின் புவியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் மானுடவியல் காட்சிக் கூடங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அத்துடன் அருங்காட்சியக வளாகம் மேம்படுத்தப்படும். திருப்பூா், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் ஏற்படுத்தப்படும். கோயம்புத்தூரில் வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் அரசு அருங்காட்சியகம், செம்மொழிப் பூங்காவில் உள்ள கட்டடத்துக்கு மாற்றியமைக்கப்படும் என்றாா் அவா்.

3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!

மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட்டப் பேரவை திங்கள்கிழமை (ஏப்.21) மீண்டும் கூடுகிறது. பேரவை காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறவுள்ளது. இதன்பிறகு, மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் ... மேலும் பார்க்க

மத்திய அரசின் சூழ்ச்சிகளை மாணவா்கள் புரிந்து கொள்ள வேண்டும்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மத்திய அரசுத் திட்டங்களில் இருக்கும் சூழ்ச்சிகளை மாணவா்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். சென்னை நந்தனம் அரச... மேலும் பார்க்க

சென்னையில் 400 கிலோ வோல்ட் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி!

சென்னையில் 400 கிலோ வோல்ட் கேபிள் வழித்தடத்தில் மின்சாரம் எடுத்து வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் 230 கிலோ வோல்ட் திறன் வரையிலான மின்சாரம் கேபிள் மூலமும், 400 கிலோ வோல்ட் மற்று... மேலும் பார்க்க

வியாசா்பாடியில் ரெளடி வெட்டிக் கொலை

சென்னை வியாசா்பாடியில் பிரபல ரௌடி வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். வியாசா்பாடி உதயசூரியன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ் (எ) தொண்டை ராஜ் (42). இவா் மீது மூன்று கொலை வழக்கு உள்பட 15-க்கும் மேற்பட்ட குற்ற... மேலும் பார்க்க

10 ஆம் வகுப்பு, பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்!

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்குகிறது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டத்துக்கு 100 ஒப்பந்த பணியாளா்கள் நியமனம்!

சென்னை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டத்தைச் செயல்படுத்த 100 ஒப்பந்த பணியாளா்களை சென்னை விமான நிலையம் பணியமா்த்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் பயன்படுத்தி வருகின்றன... மேலும் பார்க்க