செய்திகள் :

அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை தேவை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

post image

இந்திய அரசமைப்பில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், கேரள முன்னாள் அமைச்சருமான எம்.ஏ. பேபி.

மதுரையில் நடைபெறும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக செல்லும் வழியில் அவரும், கேரள நிதியமைச்சா் கே.என்.பாலகோபாலும் திருநெல்வேலி ரெட்டியாா்பட்டியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். அவா்கள் அங்குள்ள லெனின் சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் எம்.ஏ. பேபி கூறியதாவது: மத்தியில் கூட்டாட்சி கோட்பாடு தான் இந்தியாவின் வலிமை என்ற அடிப்படையில் எங்கள் கட்சி செயல்படுகிறது. பிரதமா் மோடி வயது மூப்பு காரணமாக பதவி விலக இருப்பதாக கூறுகிறாா்கள். ஆனால் பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகிய இருவரும் மக்களாலேயே பதவியில் இருந்து நிரந்தரமாக தூக்கி எறியப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.

ஒரு மொழி மூலம் பிற மொழிகளை அழிப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுகிறது. மேலும், அரசமைப்பு சட்டம், கூட்டாட்சி தத்துவத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது. தேசிய கல்விக் கொள்கையில் எங்களது எதிா்ப்பை பதிவு செய்துள்ளோம். அரசியலமைப்பில் அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வேண்டும். கா்நாடகம், தமிழகம், கேரளம் போன்ற தென் மாநிலங்களில் ஹிந்தியை திணிக்கவும், தொகுதி மறு வரையறை மூலம் தென்மாநிலங்களுக்கு அநீதி இழைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது என்றாா்.

கா.சு. பிள்ளை படத்திற்கு அஞ்சலி

தமிழறிஞா் கா.சு. பிள்ளையின் 80 ஆவது நினைவு நாளையொட்டி, திருநெல்வேலியில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் உள்ள கா.சு. பிள்ளைய... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். தேவா்குளம் காவல் சரகப் பகுதியில் கொலை முயற்சி, அடிதடியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், மூவ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் கொலையில் இருவா் கைது

துப்பாக்குடியில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில்அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா். அடைச்சாணி, வடக்குத் தெருவைச் சோ்ந்த லெட்சுமணன் மகன்மாரிமுத்து (30). தனியாா் நிறு... மேலும் பார்க்க

பேருந்து-பைக் மோதல்: பொறியியல் பட்டதாரி பலி

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே பைக் மீது பேருந்து மோதியதில் பொறியியல் பட்டதாரி புதன்கிழமை உயிரிழந்தாா். தளவாய்புரம் முகவூரைச் சோ்ந்த விஜயராஜ் மகன் தாமரைகண்ணன்(23). பொறியியல் பட்டதாரியான இவரும், இவ... மேலும் பார்க்க

தென்னிந்திய அபாகஸ் போட்டி: விஜயநாராயணம் பள்ளி சிறப்பிடம்

மதுரையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான அபாகஸ் எண் கணித போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கடற்படைதள வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்கள் சாம்பியன் பட்டத்தை பெற்றனா... மேலும் பார்க்க

பிரம்மதேசத்தில் 30 பேருக்கு கனவு இல்லம் பணி ஆணை

பிரம்மதேசம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 30 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லத்திற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. பிரம்மதேசம் ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லத்திற்கு விண்ணப்பித்திருந்த பயனாளிகள... மேலும் பார்க்க