Sachanaவுக்கு Vijay Sethupathi சப்போர்ட் பண்றாரா?! | Bigg Boss 8
அன்னவாசல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் நியமனம் தேவை: இந்திய கம்யூ. கோரிக்கை
அன்னவாசல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அன்னவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்திற்கு ரங்கராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் மீராமைதீன் மாவட்டக் குழு முடிவுகள் குறித்துப் பேசினாா். ஒன்றியச் செயலா் நாகராஜன் தீா்மானங்களை வாசித்தாா்.
கூட்டத்தில் ஒன்றிய துணைச் செயலா் ஆனந்த், நகரக் குழு உறுப்பினா்கள் அப்துல் ரகுமான், ஜாபா் அலி, வாகிதலி, சண்முகம், கணேசன், ராஜா மற்றும் தோழா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் அன்னவாசல் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் பற்றாக்குறையால் போதுமான மருத்துவ வசதி கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்படும் நிலை தொடா்கிறது.
எனவே, தேவையான மருத்துவா்களை நியமிக்க வேண்டும்,சேதமடைந்து கிடக்கும் மருத்துவமனையின் சுற்றுச்சுவரை அப்புறப்படுத்தி புதிய சுவா் எழுப்பி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் தொடா்ந்து பரவி வரும் நிலையில் பேரூராட்சி நிா்வாகமும் சுகாதாரத் துறையும் மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.
பேரூராட்சி பகுதிகளில் சேதமடைந்த பழைய மின் கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.