ஆசிய கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் தேவையா.? தமிழக முன்னாள் வீரர் கேள்வி
அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள்: `விளக்கம், ஆவணங்கள் இருந்தால்.!’ - தேதி குறித்த ராமதாஸ்
கடந்த டிசம்பர் மாதம் முதல், பா.ம.க-வில் அன்புமணி, ராமதாஸ் இடையில் முட்டல், மோதல்போக்கு தொடர்ந்து வருகிறது. கடந்த மே 30-ம் தேதியோடு, பா.ம.க தலைவர், பொதுசெயலாளர் உள்ளிட்ட பதவிக்காலம் முடிந்துவிட்டது. இப்போது தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பா.ம.கவின் உட்கட்சித் தேர்தல் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், சில தினஙகளுக்கு முன்பு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை பா.ம.க முன்வைத்து வரிசைப் படுத்தியது.

இந்த நிலையில், அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்றக் கேள்வி ராமதாஸ் ஆதரவு பா.ம.க தொண்டகளிடம் எழுந்தது. அதற்கு விளக்கமளிக்கும் வகையில் தைலாபுரத்தில் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ``அன்புமணி மீது முன்வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கை சமர்பிக்க, கட்சியின் அமைப்பு விதி எண் 23 படி ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இந்தக் குழுவின் விசாரணை அறிக்கை கடிதம், செயல் தலைவர் அன்புமணிக்கு இன்று அனுப்பி வைப்பதென முடிவு செய்யப்பட்டது.
அந்த விசாரணை அறிக்கைக்கான விளக்கம் மற்றும் ஆவணங்கள் இருந்தால் அவைகளை 31.8.2025 தேதிக்குள் நேரிலோ அல்லது மேற்கண்ட முகவரிக்கு கடிதத்தின் வாயிலாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.