செய்திகள் :

'அன்றே செத்து விட்டேன்' - அன்புமணியை நோக்கி ராமதாஸ் பாய்ச்சிய அந்த '10' குற்றச்சாட்டுகள் என்னென்ன?

post image

இன்று காலை விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவரும், அவரின் மகனுமான அன்புமணி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

அன்புமணியை நோக்கி ராமதாஸ் பாய்ச்சிய முக்கிய குற்றச்சாட்டுகள் இங்கே...

* அன்புமணிக்கு தலைமைப் பண்பு கொஞ்சம் கூட இல்லை.

* பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணியின் செயல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

* புதுச்சேரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் மேடை நாகரிகம் இல்லாமல் செயல்பட்டது யார்? ஒரே நொடியில் கட்சியை உடைத்தது யார்?

* தான் செய்த செயலை மறைத்து, கட்சியினரிடமும் மக்களிடமும் அனுதாபம் பெற அன்புமணி முயற்சித்து வருகிறார்.

இராமதாஸ்
இராமதாஸ்

* 35 வயதிலேயே அன்புமணியை எம்.பி ஆக்கியதுதான் நான் செய்த பெரிய தவறு.

* தாயை பாட்டிலால் அடிக்க முயன்றவர். குருவை அவமதித்தவர்.

* மாவட்ட செயலாளர்களுக்கு அன்புமணியே ஃபோன் செய்து, 'கூட்டத்துக்கு சென்றால், உங்களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கிவிடுவார்' என சொல்லியிருக்கிறார் அதனால் 108 பேரில், 8 பேர்தான் கூட்டத்துக்கு வந்தார்கள்; அன்றே நான் செத்துவிட்டேன்; கற்பனை கூட செய்ய முடியாத இப்படியான பொய்களை, கூசாமல் சொல்வார் அன்புமணி.

* மாவீரன் காடுவெட்டி குருவை கீழ்தரமாக நடத்தியது ஏற்கத்தக்கது அல்ல.

* தமிழ்க்குமரனை இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றேன். ஆனால் அதை அவர் செய்யவில்லை.

* சமூக ஊடகப் பேரவைக் கூட்டத்துக்கு செல்பவர்களை அடிக்க 6 பேரை நியமித்திருக்கிறார் என பொய் பரப்பினார். நான் அப்படி செய்வேனா?

* எனக்கு பொய்யே வராது. அன்புமணிக்கு கூசாமல் பொய் வருகிறது.

அன்புமணி
அன்புமணி

* அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் எனவும், பாஜகவுடன் கூட்டணி வேண்டும் என அன்புமணியும் அவரது மனைவியும் சௌமியாவும் என்னிடம் அழுதனர். கால்களை பிடித்தனர். பாஜக கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் எனக்கு நீங்கள் தான் கொள்ளி வைக்க வேண்டும் என அன்புமணி மிரட்டினார். நீண்ட நேரம் அழுதததால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை"

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் யார், யார்? தொடரும் இழுபறி; பின்னணி என்ன?

தமிழ்நாட்டிலிருந்து தேர்வான ஆறு மாநிலங்களவை எம்.பி-களின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது.பிரதிநிதித்துவ அடிப்படையில் தி.மு.க-வுக்குக் கிடைக்கும் நான்கு இடங்களை மூன்று தன்வசப்படுத்தி இருக்க... மேலும் பார்க்க

முதல்வர் வருகை; திரைச்சீலையால் மறைக்கப்பட்ட ’அசுத்த’ கால்வாய் - புதுப்பிக்கப்பட்ட சாலைகள்

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திமுகவினர் செய்து வரும் பிரமாண்ட ஏற்பாடுகளால் மதுரை மாநகரம் அமளிதுமளியாகி வரும் நிலையில் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. புதுப்பிக்கப்படும் சாலைகள்நீண்ட கால... மேலும் பார்க்க

DMK: 'புதிய பதவி... புதிய அணிகள்... புதிய துணை பொதுச்செயலாளர்...' - திமுக பொதுக்குழு பரபர!

ஜனவரி மாதம் நடக்கவிருப்பதாகச் சொல்லப்பட்ட திமுக பொதுக்குழு, ஒருவழியாக ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரான பி.மூர்த்தி கவனித்து ... மேலும் பார்க்க

Gaza: அச்சுறுத்தி நெருக்கும் இஸ்ரேல் ராணுவம்... வடக்கு காசாவின் கடைசி மருத்துவமனையும் மூடல்!

aவடக்கு காசா மாகாணத்தில் சுகாதார சேவைகள் வழங்கிவந்த கடைசி மருத்துவமனையான அல்-அவ்தா மருத்துவமனையை உடனடியாக மூடவேண்டும் என இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்டதை தொடர்ந்து, சேவைகளை நிறுத்தியுள்ளதாக மருத்துவமனையி... மேலும் பார்க்க

Seeman: "அதிமுக கூட்டணி; துணை முதல்வர் பதவி; ஆதவ் கொடுத்த வாக்கு" - ரகசியம் சொல்லும் சீமான்!

'சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு!'அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்தால் துணை முதல்வர் ஆக்குகிறோம் என்று ஆதவ் அர்ஜுனா, தன்னிடம் கூறியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர் சந்திப்ப... மேலும் பார்க்க

PMK : 'ராமதாஸ் அய்யா குலசாமி; நான் கட்சித் தலைவர்!' - அன்புமணி திட்டவட்டம்

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் இன்று பாமக தலைவர் அன்புமணி இரண்டாவது நாளாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். கூட்டத்தில் பேசிய அவர... மேலும் பார்க்க