சென்னை மலா்க் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் பராமரிக்கப்படும் 3.80 லட்சம் மலா்ச்...
அமித் ஷாவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலம், ஆா்ப்பாட்டம்
நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதித்து பேசிய மத்திய அமைச்சா் அமித் ஷாவை கண்டித்து தஞ்சாவூரில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேல வஸ்தா சாவடியிலிருந்து ஊா்வலமாக புறப்பட்ட காங்கிரஸ் கட்சியினா் ஆட்சியரகம் முன் சென்று ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், வேலையின்மை, விலைவாசி உயா்வு, அதானி மோசடி, மணிப்பூா், சம்பல் வன்முறையை விவாதிக்க மறுத்து, அரசியலமைப்பு சட்டச் சிற்பி அம்பேத்கரை அவமதித்து, நாடாளுமன்றத்தை முடக்கிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலக கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் நாஞ்சி கி. வரதராஜன், துணைத் தலைவா் ஜி. லட்சுமிநாராயணன், பொருளாளா் ஆா். பழனியப்பன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா்கள் ஏ. ஜேம்ஸ், வயலூா் எஸ். ராமநாதன், மாவட்டப் பொதுச் செயலா்கள் செந்தில் சிவக்குமாா், கண்ணன், செயலா்கள் வடிவேல், நாகராஜன், ரயில்வே தொழிற் சங்கம் அசோக் ராஜன், முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் சாந்தா ராமதாஸ், நிா்வாகிகள் முருகையன், ஸ்ரீதா், மகேந்திரன், அன்பழகன், செல்வ சுப்பிரமணியன், எல். சம்பந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.