செய்திகள் :

"அமித் ஷா உட்பட 3 பேரை டெல்லியில் சந்தித்தேன்" - தமிழகம் திரும்பிய செங்கோட்டையன் என்ன சொல்கிறார்?

post image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைப்புச் செயலாளர் செங்கோட்டையனுக்கும் பல மாதங்களாக உட்கட்சி மோதல் நீடித்து வருகிறது.

இவ்வாறிருக்க, அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு செப்டம்பர் 5-ம் தேதி செங்கோட்டையன் கெடு விதித்தார்.

அடுத்த நாளே, அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் கட்சிப் பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி
செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி

இதற்கு எதிர்வினையாற்றிய செங்கோட்டையன், தன்னைக் கேட்காமல் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கான விளைவு போகப் போகத் தெரியும் என்றார்.

அதோடு, "பா.ஜ.க தலைவர்கள் யாரையும் சந்திக்க புதுடெல்லி செல்லவில்லை" என நேற்று கோவை விமான நிலையத்திலிருந்து ஹரித்வார் புறப்பட்டார்.

ஆனால், அவர் கிளம்பும்போதே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைத்தான் சந்திக்கச் செல்கிறார் எனப் பேச்சு அடிபட்டது.

அதற்கேற்றாற்போல, டெல்லியில் அமித் ஷாவை நேரில் சந்தித்து சுமார் அரை மணிநேரம் செங்கோட்டையன் பேசியதாக டெல்லி அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் பரவின.

இந்த நிலையில், இன்று பிற்பகல் கோவை விமான நிலையம் வந்தடைந்த செங்கோட்டையன், தனது பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.

அப்போது செங்கோட்டையன், "நேற்று ஹரித்வார் செல்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றிருந்தேன். நான் டெல்லி சென்றதும் உள்துறை அமைச்சரைச் சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டது.

அதன்மூலமாக, உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகிய இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றி கருத்துக்கள் அங்கு பரிமாறப்பட்டன. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும், இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கருத்துக்களை அவர்களிடத்தில் எடுத்துச் சொன்னேன்.

அந்தச் சந்திப்பின்போது ரயில்வே துறை அமைச்சரும் வந்தார். அவரிடம், ஈரோட்டிலிருந்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தை மாற்றினால் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறினேன்.

எனவே மக்கள் பணி செய்வதற்கும், இயக்கம் வலிமை பெறுவதற்கும் தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று தெரிவித்தார்.

``இந்தியா, சீனா மீது 100% வரி விதிக்க வேண்டும்" - ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய ட்ரம்ப்!

ரஷ்யாவின் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, இந்தியா மற்றும் சீனா மீது 100% இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஃபைனான்சியல் டைம்ஸ் வெ... மேலும் பார்க்க

Israel: கத்தார் மீது வான்வழித் தாக்குதல்; ஹமாஸை குறிவைத்ததாகக் குற்றச்சாட்டு; அமெரிக்கா கண்டனம்!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடர்ந்து வரும் போரில் செப்டம்பர் 8, 2025 அன்று, ஜெருசலமின் வடக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ரமோட் சந்திப்பு (Ramot Junction) என்ற இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இரண்டு பேர் ... மேலும் பார்க்க

ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு என்ன செய்தி?

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வரலாற்றில் யாரும் பெற்றிடாத அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றவர் ஜெகதீப் தன்கர்.2022-ல் நடைபெற்ற தேர்தலில், பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஜெகதீ... மேலும் பார்க்க

அசைன்மென்ட் கொடுத்த அமித் ஷா; கலகத்தை ஆரம்பித்த செங்கோட்டையன்! - எடப்பாடி அவுட்... வேலுமணி இன்!

''ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2017-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம், கூவத்தூர் கூத்துகள் எல்லாம் வெடித்த காலத்தில், 'முதலமைச்சர் ரேஸில்' செங்கோட்டையன் பெயர்தான் முதலில் இருந்தது. அதற்கு முட்டுக... மேலும் பார்க்க

NDA: Sengottaiyan - Amit Shah - Thambidurai - முக்கோண சந்திப்பின் பின்னணி? ADMK TVK | Imperfect Show

* நேபாளத்தில் வெடித்த GEN Z போராட்டம் - பின்னணி என்ன?* நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா!* இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணை தலைவர் யார்? - இன்று வாக்குப்பதிவு* இளையராஜா எம்.பி.யுடன் சி.பி.ராதாக... மேலும் பார்க்க