அமீர் கானின் ‘சித்தாரே சமீன் பார்’ டிரைலர்!
நடிகர் அமீர் கான் நடிப்பில் உருவான சித்தாரே சமீன் பார் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
லால் சிங் சத்தா திரைப்படத்திற்குப் பின் நடிகர் அமீர் கான் நடித்து முடித்துள்ள திரைபடம் சித்தாரே சமீன் பார். (sitaare zameen par)
இயக்குநர் ஆர். எஸ். பிரசன்னா இயக்கிய இப்படத்தில், கூடைப்பந்து விளையாட்டின் பயிற்சியாளராக இருக்கும் அமீர் கான் ஒரு அணியை உருவாக்குகிறார். மூளை வளர்ச்சி குன்றிய அணியினர் எப்படியெல்லாம் பயிற்சியாளரைச் சோதிக்கிறார்கள் என்பதை நகைச்சுவையுடன் கூடிய எமோஷனல் கதையாக உருவாக்கியுள்ளனர்.
அமீர் கானுக்கு ஜோடியாக ஜெனிலியா நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் மூளை வளர்ச்சி குன்றியவர்களையே நடிக்க வைத்திருக்கின்றனர்.
இதையும் படிக்க: விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் வெளியீட்டுத் தேதி மாற்றம்!
இப்படம் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். மூன்று ஆண்டு கழித்து வெளியாகும் அமீர் கான் படமென்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.