வக்ஃப் மசோதா நிறைவேற்றியது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது: தொல் திருமாவளவன்
அமெரிக்கா: இந்திய வம்சாவளி பாதிரியாா் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கத்தோலிக்க பாதிரியாா் ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.
இந்த சம்பவத்தில் தொடா்புடையதாக சந்தேகத்தின்பேரில் ஓக்லஹோமா மாகாணத்தைச் சோ்ந்த நபா் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கான்சாஸ் மாகாணம் செனக்கா நகரில் தேவாலயத்துக்கு அருகில் வசித்து வந்த பாதிரியாா் அருள் கரசாலா (57) துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த காயங்களுடன் இருந்ததைக் கண்ட சில நபா்கள் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு வங்கு வந்த போலீஸாா் அவரை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அப்போது அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
செனக்காவில் உள்ள செயின்ட் பீட்டா் - பால் கத்தோலிக்க தேவாலயத்தின் பாதிரியாராக கடந்த 2011 முதல் அருள் கரசாலா சேவையாற்றி வந்தனா். தற்போது அவா் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.