அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா அதிக வரிகளை விதிக்க வேண்டும்: கேஜரிவால்
அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா அதிக வரிகளை விதிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய கேஜரிவால். பாஜக தலைமையிலான மத்திய அரசு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கான 11 சதவீத வரியை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் உள்ளூர் விவசாயிகளின் வணிகத்தைப் பாதிக்கலாம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடியின் இந்த முடிவு இந்திய விவசாயிகளுக்கு பாதகமாக இருக்கலாம் என்று ஆம் ஆத்மி தலைவர் கூறினார்.
அமெரிக்க இறக்குமதிகளுக்கு அரசு அதிக வரிகளை விதிக்க வேண்டும் என்று அவர் கோரினார்.
மற்ற நாடுகள் அடிபணியவில்லை. அவர்கள் அதிக வரிகளை விதித்தனர். நாமும் அதிக வரிகளை விதிக்க வேண்டும்.
அமெரிக்கா 50 சதவீத வரிகளை விதித்தால், நாம் வரிகளை 100 சதவீதமாக இரட்டிப்பாக்க வேண்டும். இந்த முடிவை முழு நாடும் ஆதரிக்கும். இந்தியாவைப் புண்படுத்த எந்த நாடாளும் முடியாது. நாம் 140 கோடி மக்களைக் கொண்ட ஒரு நாடு என்று அவர் கூறினார்.