செய்திகள் :

அமைச்சா் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு வழக்கு: ஏப்.17-இல் இறுதி விசாரணை

post image

சென்னை: அமைச்சா் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதி விசாரணையை ஏப். 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திமுக ஆட்சியின்போது 1996-2001-ஆம் ஆண்டு காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தாா். அப்போது அவா் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.36 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக, 2002- ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணை வேலூருக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட வேலூா் நீதிமன்ற நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோா் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவா்களை விடுதலை செய்வதாக தீா்ப்பளித்தாா்.

இந்தத் தீா்ப்புக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தாா். இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது அமைச்சா் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ, அமைச்சா் பொன்முடி மீதான வழக்கை வேலூா் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் எந்தக் கோரிக்கையும் வைக்கப்படவில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் விளக்கத்தை கேட்காமல் வேலூருக்கு வழக்கு மாற்றப்பட்டது. எனவே, இதற்கு குற்றஞ்சாட்டப்பட்டவா் பொறுப்பாக மாட்டாா்.

இந்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் ஏற்கனவே 70 சதவீத விசாரணையை முடித்திருந்த நிலையில், வேலூா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு வழக்கின் எஞ்சிய அம்சங்களின் மீது விசாரணை நடந்து தீா்ப்பளிக்கப்பட்டது. எனவே, அவசர கதியில் ஐந்து நாள்களில் தீா்ப்பளிக்கப்பட்டதாகக் கூற இயலாது என்று வேலூா் நீதிமன்ற நீதிபதியே மனு தாக்கல் செய்துள்ளாா் என வாதிட்டாா்.

பதிலளிக்க உத்தரவு: அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஒரு மாவட்டத்தில் உள்ள வழக்கை அந்த மாவட்டத்தின் நிா்வாக நீதிபதிகள், வேறு மாவட்டத்துக்கு மாற்ற முடியுமா? அனைத்து நீதிபதிகள் அடங்கிய குழு முன்வைக்காமல், தலைமை நீதிபதி வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்ற ஒப்புதல் வழங்க முடியுமா என்பது குறித்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், பொன்முடியின் வழக்குரைஞா் என்.ஆா். இளங்கோ ஆகியோா் பதிலளிக்க வேண்டும்.

வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்ற முடியும் என்றால் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்த முடியாது. 5 நாள்களில் தீா்ப்பளித்தாா் என்பதற்காக அந்த தீா்ப்பை ரத்து செய்ய முடியாது என தெரிவித்து வழக்கின் மீதான இறுதி விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

ஹஜ் புனிதப் பயணத்திற்கான பயணிகளை பாதிக்கும் வகையில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று(ஏப். 16) கடிதம் எழுதியுள்ளார்.அக்கடி... மேலும் பார்க்க

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்கள... மேலும் பார்க்க

முதல்வர் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம் தொடங்கியது!

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந... மேலும் பார்க்க

மலையேற்றம் மேற்கொள்வர்கள் கவனத்துக்கு... 23 வழித்தடங்கள் திறப்பு!

தமிழ்நாட்டில் மலையேற்றத்திற்காக இன்றுமுதல்(ஏப். 16 ) 40 மலையேற்ற வழித்தடங்களில் 23 வழித்தடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:த... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி பெயர்களில் உள்ள சாதியை நீக்க உத்தரவு!

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எ... மேலும் பார்க்க

காலை உணவில் உப்புமாவுக்கு பதில் பொங்கல்! கீதா ஜீவன் அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் இன்று (ஏப். 16) அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் சமூ... மேலும் பார்க்க