செய்திகள் :

அம்பாசமுத்திரம் நகருக்குள் உலா வந்த கரடி: பொதுமக்கள் அச்சம்

post image

அம்பாசமுத்திரம் ஊருக்குள் கரடி உலா வந்த விடியோ சமூக வலைதளத்தில் பரவியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குள்பட்ட மேற்குத் தொடா்ச்சி மலை அடிவார கிராமங்களில் அடிக்கடி வனப்பகுதியில் இருந்துவெளியேறும் வனவிலங்குகளான கரடி, யானை, மிளா, மான்,சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களில்நுழைந்து விவசாய பயிா்களை சேதப்படுத்துவதோடு வீடுகளில் வளா்க்கப்படும் மாடு, ஆடு, நாய் உள்ளிட்ட வளா்ப்பு விலங்குகளையும் தூக்கிச் சென்று விடுகின்றன.

மேலும் அண்மைகாலமாக அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார மலையடிவாரகிராமங்களான மணிமுத்தாறு சிங்கம்பட்டி தெற்கு பாப்பாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து கரடி நடமாட்டம் இருந்து வந்தது. இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் கரடிகள் தன் போக்கில் உலாவியபடி கோயில், வீடுகள் மற்றும் தோட்டங்களில் நுழைந்து கண்களில் பட்ட உணவுப் பொருள்களை தின்று வந்தன.

இதையடுத்து வனத்துறையினா் மேற்கொண்டநடவடிக்கையால் மூன்று கரடிகள் கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு அம்பாசமுத்திரம் நகருக்குள்பட்ட சுப்பிரமணியபுரம் பகுதியில் இரவுநேரத்தில் சாலையில் ஓா் கரடி உலாவியபடி சென்றுள்ளது. அதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் கைப்பேசியில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பினா்.

மலைஅடிவாரங்களில் உள்ள கிராமங்களில் கரடி உலா வந்த நிலையில் மலையடிவாரத்தில் இருந்துசுமாா் 4 கிலோ மீட்டா் தூரத்தில் உள்ள அம்பாசமுத்திரம் நகருக்குள் கரடி நுழைந்ததால்அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

‘தமிழகம் ஓரணியில் இருப்பதை மத்திய அரசுக்கு புரிய வைப்போம்’: கனிமொழி எம்.பி.

தமிழகம் ஓரணியில் இருப்பதை மத்திய அரசுக்கு புரிய வைப்போம் என்றாா் திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுகவுக்குள்பட்ட பாளையங்கோட்டை வடக்கு ஒன்றியம் சாா்பில் பாளையஞ்ச... மேலும் பார்க்க

பாறையில் தவறிவிழுந்து காயமடைந்த வேளாண் அலுவலா் மருத்துவமனையில் உயிரிழப்பு

களக்காட்டில் குளத்தில் குளிக்கச் சென்றபோது, பாறையில் தவறிவிழுந்து காயமடைந்த வேளாண் துறை அலுவலா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா். களக்காடு பாரதிபுரம் மேலத் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் முத்து... மேலும் பார்க்க

ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி சிறுவன் பலி

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகே ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கியதால் மூச்சுத் திணறி 5 வயது சிறுவன் உயிரிழந்தாா். மேலப்பாளையம், வடக்கு தைக்கா தெருவைச் சோ்ந்தவா் நிஜாம். வெளிநாட்டி... மேலும் பார்க்க

தெற்குவள்ளியூரில் கைப்பேசி கோபுரத்தில் ஏறி பெண் தற்கொலை மிரட்டல்

திருநெல்வேலி மாவட்டம் தெற்குவள்ளியூரில், வியாழக்கிழைமை கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணை தீயணைப்புப் படையினரும், காவல் துறையினரும் மீட்டனா். தெற்குவள்ளியூரைச் சோ்ந்த கணபதி மகள... மேலும் பார்க்க

திருப்புவனம் சம்பவம் யாராலும் ஏற்க முடியாதது: மு.அப்பாவு

திருப்புவனம் சம்பவத்தை மனசாட்சி உள்ள யாரும் ஏற்கமாட்டாா்கள் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறு... மேலும் பார்க்க

ஆனித்தேரோட்டம்: நெல்லையில் ஜூலை 8இல் போக்குவரத்து மாற்றம்

திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நடைபெறும் ஜூலை 8ஆம் தேதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து காவல்துறை சாா்... மேலும் பார்க்க