இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!
'அம்பானி முதலிடம்; அதானி அடுத்த இடம்!'- இந்திய பணக்காரர் பட்டியல் வெளியீடு; சொத்து மதிப்பு தெரியுமா?
2023, 2024 என அடுத்தடுத்த ஆண்டுகளில், கௌதம் அதானிக்கு முறையே ஹிண்டன்பர்க் அறிக்கை, சோலார் பேனல் மோசடி போன்ற பிரச்னைகள் வந்தன. இருந்தும், அசராமல் அதில் இருந்து மீண்டு, இந்த ஆண்டு இந்தியாவின் டாப் பணக்காரர்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் அதானி.
ஹூருன் குளோபல் பணக்காரர்கள் பட்டியல், 2025 தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சரிந்தும் முதலிடம்!
அதில் முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்களில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். என்னதான், அவர் முதல் இடத்தை பிடித்தாலும், அவருடைய சொத்து மதிப்பில் கடந்த ஆண்டு கிட்டதட்ட ரூ.1 லட்சம் கோடி சரிந்திருக்கிறது.

13% உயர்வு
இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அதானி நிறுவனத்தின் பங்கு கடந்த ஆண்டு பல சரிவுகளை சந்தித்திருந்தது. இருந்தும், கடந்த ஆண்டில், அவரது சொத்து மதிப்பு 13 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதனால், அம்பானிக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார் அதானி.
முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.8.6 லட்சம் கோடி ஆகும்.
கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.8.4 லட்சம் கோடி ஆகும்.
அடுத்தடுத்த இடங்கள்
இதற்கு அடுத்தடுத்த இடங்களை ஹெச்.சி.எல்லின் ரோஷினி நாடார் (ரூ.3.5 லட்சம் கோடி), சன் பார்மசூட்டிகல் தொழிற்சாலைகளின் திலிப் சங்க்வி (ரூ.2.5 லட்சம் கோடி), விப்ரோவின் அசிம் பிரேம்ஜி (ரூ.2.2 லட்சம் கோடி) பிடித்துள்ளனர்.
இந்திய பணக்காரர்கள் பட்டியலின் டாப் 10 இடங்களில் ரோஷினி நாடார் முதல்முறையாக இடம்பிடித்துள்ளார்... அதுவும் மூன்றாம் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.