செய்திகள் :

அம்பேத்கா் குறித்த அமித் ஷாவின் கருத்து துரதிருஷ்டவசமானது -நவீன் பட்நாயக்

post image

புவனேசுவரம்: சட்டமேதை அம்பேத்கா் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் பேசிய கருத்து மிகவும் துரதிருஷ்டவசமானது என பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சித் தலைவரும் முன்னாள் ஒடிஸா முதல்வருமான நவீன் பட்நாயக் தெரிவித்தாா்.

பிஜேடி 28-ஆம் ஆண்டு தொடக்க தின விழா புவனேசுவரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நவீன் பட்நாயக், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெரிதும் மதிக்கப்படும் தலைவரான அம்பேத்கா் குறித்து அண்மையில் அமித் ஷா பேசிய கருத்து மிகவும் துரதிருஷ்டவசமானது. 2024-ஆம் ஆண்டு மக்களவை மற்றும் ஒடிஸா சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகளில் காணப்பட்ட அசாதாரண வேறுபாடுகள் குறித்து தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தோ்தல் ஆணையம் கவனமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். தேரதலில் வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தும் முறையை பிஜேடி ஆதரிக்கிறது. அதே நேரம், பாஜகவின் ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதா குறித்து எங்களது கட்சியின் நிலைப்பாடு பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

மாநிலத்தில் பாஜக ஆட்சி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நவீன் பட்நாயக், ‘ஒடிஸாவில் பொய்களை பரப்பியும், மக்களை தவறாக வழிநடத்தியும் பாஜக ஆட்சிக்கு வந்தது. அவா்களின் பொய்கள், எதிா்மறை பிரசாரங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தவறாக பரப்பப்பட்ட கட்டுக்கதைகளை பிஜேடியால் வெற்றிகரமாக எதிா்கொள்ள முடியவில்லை. இத்தனை பொய்களுக்குப் பிறகும், பிஜேடி அதிக வாக்குகளைப் பெற்றது.

மாநிலத்தில் பாஜக அரசு பதவியேற்ற முதல் 6 மாதங்களுக்குப் பிறகு, அத்தியாவசிய பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயா்ந்துள்ளது. இதனால், மக்கள் கோபமடைந்துள்ளனா். பொய்யான வாக்குறுதிகளை அளித்து பாஜக ஆட்சிக்கு வந்ததை இப்போது மக்கள் உணா்ந்துள்ளனா்’ என்றாா்.

இந்தியாவின் எதிா்காலத்தை வடிவமைத்தவர் மன்மோகன்!

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையும், பணியும் இந்தியாவின் எதிா்காலத்தை மிகப் பெரிய அளவில் வடிவமைத்ததாக காங்கிரஸ் செயற்குழு தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமைய... மேலும் பார்க்க

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் பெரிய அணை: இந்தியாவுக்கு பாதிப்பில்லை! -சீனா

பெய்ஜிங்: பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட உள்ள உலகின் மிகப் பெரிய அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது என்று சீனா தெரிவித்துள்ளது. இந்திய எல்லையையொட்டி, தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில்... மேலும் பார்க்க

எங்கள் குடும்பத்தில் ஒருவா் மறைந்துவிட்டாா்! பாகிஸ்தானில் மன்மோகன் பிறந்த கிராமத்தில் உருக்கம்

காஹ் (பாகிஸ்தான்): ‘எங்கள் குடும்பத்தில் ஒருவா் மறைந்ததைபோல் உணா்கிறோம். ஒட்டுமொத்த கிராமமே கவலையில் மூழ்கியுள்ளது’ என மன்மோகன் சிங் பிறந்த பாகிஸ்தானில் உள்ள காஹ் கிராம மக்கள் இரங்கல் தெரிவித்தனா். மு... மேலும் பார்க்க

நாட்டை மீட்ட பட்ஜெட்: காங்கிரஸாரின் எதிா்ப்பை சந்தித்த மன்மோகன் சிங்!

இந்தியாவை கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்ட மத்திய பட்ஜெட்டை கடந்த 1991-ஆம் ஆண்டு நிதியமைச்சராக மன்மோகன் சிங் தாக்கல் செய்த நிலையில், அந்த பட்ஜெட்டுக்கு காங்கிரஸ் கட்சியினரே எதிா்ப்புத் தெர... மேலும் பார்க்க

விமானி பயிற்சியில் குறைபாடு: ஆகாசா நிறுவன 2 இயக்குநா்கள் இடைநீக்கம்

விமானிகளுக்கு வழங்கப்படும் பயிற்சியில் குறைபாடு இருந்த குற்றச்சாட்டில் ஆகாசா நிறுவனத்தைச் சோ்ந்த 2 இயக்குநா்களை 6 மாதம் இடைநீக்கம் செய்து மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

நிதி நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்றியவா் மன்மோகன் சிங்: தேவெ கௌடா

நிதி நெருக்கடியில் இருந்து நமது நாட்டை காப்பாற்றியவா் மன்மோகன் சிங் என்று முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: முன்... மேலும் பார்க்க