செய்திகள் :

``அயராத அர்ப்பணிப்பு, ஆர்வத்தின் வெளிப்பாடுதான் இது'' - சாதனைப் படைத்த நீரஜ் சோப்ரா; வாழ்த்திய மோடி

post image

90.23 மீ தூரம் ஈட்டி எறிந்து, நீரஜ் சோப்ரா புதிய சாதனையைப் படைத்து இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்திருக்கிறார். 

தடகள வீரரான நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் சர்வதேச களத்தில் சிறந்து விளங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். 

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கமும், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் வென்று இந்தியாவிற்கு பெருமைச் சேர்ந்திருந்த நீரஜ் சோப்ரா மேலும் ஒரு சாதனையைப் படைத்து இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்திருக்கிறார். 

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா

கத்தார் நாட்டின் தோஹாவில் டைமண்ட் லீக் தடகளத்தின் 16-வது சீசன் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இந்திய வீரர்களான நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா, பாருல் சௌத்ரி, குல்வீர் சிங் ஆகிய 4 பேரும் பங்கேற்கின்றனர். இதுபோன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் அதிகளவிலான இந்திய வீரர்கள் பங்கேற்பது இதுவே முதல்முறை.

இந்த நிலையில், தனது 18-வது டைமண்ட் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, 90.23 மீ தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறார். 

இதன் மூலம், 90 மீட்டர் என்ற அளவை எட்டிய மூன்றாவது ஆசிய வீரர் மற்றும் 25-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் நீரஜ் சோப்ரா. 

பலரும் நீரஜ் சோப்ராவிற்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா

“ ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா அற்புதமானச்  சாதனையைப் படைத்திருக்கிறார். இந்தியா பெருமைக் கொள்கிறது. 

தோஹாவில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் 90.23 மீ தூரம் ஈட்டி எறிந்ததற்கு வாழ்த்துகள். நீரஜ் சோப்ராவின் அயராத அர்ப்பணிப்பு, ஆர்வத்தின் வெளிப்பாடுதான் இது” என்று வாழ்த்தி இருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

RCB vs KKR : 'ரத்தான போட்டி; ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த கொல்கத்தா - RCB நிலை என்ன?

'விடாத மழை!'பெங்களூரு - கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி மழை காரணமாக ரத்தாகியிருக்கிறது. இதனால் இரு அணிகளுக்கு தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டி ரத்தானதால் ப்ளே ஆஃப் ரேஸில் என்னென... மேலும் பார்க்க

Neeraj Chopra: கனவாக இருந்த 90 மீ இலக்கு; இந்தியா - பாகிஸ்தான் சர்ச்சை; எப்படிச் சாதித்தார் நீரஜ்?

'நீரஜ் சோப்ரா - 90 மீ மார்க்!'நீரஜ் சோப்ரா தனது கரியரில் இதுவரை எட்டாத இலக்கை எட்டியிருக்கிறார். தோஹாவில் நடந்த டைமண்ட் லீக் தொடரில் 90.23 மீட்டருக்கு ஈட்டியை வீசி இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். 90... மேலும் பார்க்க

Neeraj Chopra : 'பாகிஸ்தான் வீரருடன் நெருங்கிய நட்பில் இல்லை!' - நீரஜ் சோப்ரா விளக்கம்!

'நீரஜ் சோப்ரா விளக்கம்!'ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக தங்கம் மற்றும் வெள்ளி வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சார்ந்து சமீபத்தில் ஒரு சர்ச்சை எழுந்திருந்தது. நீரஜ் சோப்ரா (Neeraj Chopra)அதாவது, பெங... மேலும் பார்க்க

Mumbai Indians : 'ப்ளே ஆப்ஸூக்காக ஜானி பேர்ஸ்டோவை அழைத்து வருகிறதா மும்பை?' - லேட்டஸ்ட் அப்டேட்

இந்தியா - பாகிஸ்தான் பதற்றநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் போட்டிகள் நாளை முதல் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், போட்டிகள் தள்ளிப்போய் தேதி மாறியதால் சில வெளிநாட்டு வீரர்கள் எஞ்சிய போட்டிகள... மேலும் பார்க்க

IPL Playoffs : 'மும்பைக்குதான் பெரிய பிரச்னை' - எந்தெந்த அணிகள் ப்ளே ஆப்ஸூக்கு செல்லும்?

தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் போட்டிகள் மீண்டும் தொடங்கவிருக்கிறது. நடப்பு சீசனின் க்ளைமாக்ஸை எட்டிவிட்டோம். இன்னும் 13 லீக் போட்டிகள்தான் எஞ்சியிருக்கிறது. ஆனால், இன்னமும் எந்த அணியும் ... மேலும் பார்க்க