உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் 2025 இறுதிக்குள் சந்தைக்கு ...
அயோத்தியா, பிரயாக்ராஜ் தொடர்ந்து பெயர் மாறப்போகும் நகரம் இதுவா?
உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியா, பிரயாக்ராஜ் நகரங்களைத் தொடர்ந்து அலிகார் நகரின் பெயரை மாற்ற வேண்டும் என்று மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மௌரியா வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஹிந்து கௌரவ் நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேஷவ் பிரசாத், ஃபைசாபாத் நகரம் எவ்வாறு அயோத்தியா என்றும், அலகாபாத் எவ்வாறு பிரயாக்ராஜ் என்றும் மாற்றப்பட்டதோ, அவ்வாறு அலிகார் நகரின் பெயர் ஹரிகர் என்று மாற்றப்பட வேண்டும் என்றார்.