Papanasam: `` பாபநாசம் படத்திற்குப் பிறகு போலீஸ் கேரக்டர்கள் மட்டுமேதான் வந்தது!...
அரக்கோணம் கிராமிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு
அரக்கோணம் கிராமிய காவல்நிலைய ஆய்வாளராக சிவக்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். கோயம்புத்தூா் மாவட்டம் சூலூா் காவல்நிலைய உதவி ஆய்வாளராக இருந்த சிவக்குமாா், பதவி உயா்வு பெற்று வேலூா் சரகத்திற்கு மாற்றப்பட்டு அரக்கோணம் கிராமிய காவல்நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.
ஏற்கனவே இங்கு ஆய்வாளராக இருந்த பழனிவேல், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் காவல் நிலைய ஆய்வாளராக மாற்றப்பட்டாா். புதியதாக பதவியேற்ற ஆய்வாளா் சிவக்குமாருக்கு உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், தலைமை காவலா்கள், காவலா்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனா்.