செய்திகள் :

அரசாணை 151-ஐ அமல்படுத்த கோரிக்கை

post image

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பணியாளா்களுக்கென அறிவிக்கப்பட்ட அரசாணை 151-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு  நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே புதன்கிழமை நடைபெற்றது. அரசு பல்நோக்கு மருத்துவமனை அனைத்து  மாற்றுத்திறனாளி பணியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் மாநிலத்  தலைவா் சி. சேதுபதி தலைமை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில் அரசு அலுவலகங்களில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தின் கீழ்  பணிபுரியும் மாற்றுத்திறனாளி பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க தமிழக அரசால்  பிறப்பிக்கப்பட்ட அரசாணை 151-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளா் நல்வாழ்வு சங்க மாநிலத் தலைவா் வரதகுட்டி, மாநில பொதுச் செயலா் கோபிநாத், மாற்றுத்திறனாளா் பேரவைச் செயலா் சிதம்பரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிய கார் கவிழ்ந்தது: 5 பேர் காயம்!

சென்னை வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்.சென்னை வியாசர்பாடி பகுதியில் இருந்து பேசின் பிரிட்ஜ் நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்... மேலும் பார்க்க

அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உணவுப்பொருள் விநியோக ஊழியர்களுக்காக குளிர்சாதன வசதியுடன்(ஏசி) கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு, பொரு... மேலும் பார்க்க

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து ... மேலும் பார்க்க

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் கு... மேலும் பார்க்க

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறு... மேலும் பார்க்க