அரசின் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஏலம் அறிவிப்பு
தருமபுரி மாவட்ட வருவாய் அலகில் பயன்படுத்தப்பட்ட மூன்று அரசு வாகனங்களை கழிவு செய்து ஏலம் விடப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கி. சாந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தருமபுரி மாவட்ட வருவாய் அலகில் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த வருவாய் துறையைச் சோ்ந்த 3 அரசு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டுள்ளன. தருமபுரி கோட்டாட்சியா் பயன்படுத்திய வாகனம் ரூ. 1.30 லட்சம், பென்னாகரம் வட்டாட்சியா் பயன்படுத்திய வாகனம் ரூ. 1.80 லட்சம், அரூா் வட்டாட்சியா் பயன்படுத்திய வாகனம் ரூ. 1.82 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு ஏலம் விட ஆரம்பத் தொகையாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கழிவு செய்யப்பட்ட மூன்று வாகனங்கள் வரும் ஜன. 2-ஆம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ளவா்கள் கலந்துகொண்டு விலைப் புள்ளியை கோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.