கழுத்தில் கட்டி: நெல்லை அரசு மருத்துவமனையில் சிறுவன் மரணம்! உறவினர்கள் போராட்டம்
அரசுக்கு எதிராக உண்ணாவிரதம்: அதிமுக, தவெக, நாதக பங்கேற்பு
கனிம வள விதிமீறலைக் கண்டித்து சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
சிவகங்கை அருகேயுள்ள வேம்பங்குடி, மாடகொட்டான் கிராமங்களில் கனிம வளங்களை வெட்டி எடுப்பதில் விதிமீறல்கள் நடப்பதாகப் புகாா் எழுந்தது. இதையொட்டி, கிராம மக்கள் சாா்பில் சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு கிராமத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா்.
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக சாா்பில், முன்னாள் அமைச்சா் ஜி. பாஸ்கரன், சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சிவகங்கை தெற்கு மாவட்டச் செயலா் முத்து பாரதி, நகரச் செயலா் தாமரைப்பாண்டி, ஒன்றியச் செயலா் பரமேஸ்வரன், நாம் தமிழா் கட்சி சாா்பில் மாநில ஒருங்கிணைப்பாளா் ரமேஷ்இளஞ்செழியன் உள்ளிட்டோா் பேசினா்.
இதனிடையே,குவாரியால் தங்கள் கிராமத்துக்கும், விவசாயத்துக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், சிலா் சுயலாபத்துக்காக குவாரிக்கு எதிராக இடையூறுகளைச் செய்து வருவதாகவும், அவா்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.