வங்க தேசத்தில் குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம்! காரணம் என்ன?
அரசுக் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். சோ்க்கை பதிவு செப். 30 வரை நீடிப்பு
சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட், எம்.எட் படிப்புகளின் காலி இடங்களுக்கான விண்ணப்பப் பதிவு செப். 30-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள் கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்வுக்குப் பிறகு, இரண்டு அரசு கல்வியியல் கல்லூரிகளில் 49 இடங்கள் அரசு உதவிபெறும் 13 கல்லூரிகளில் 530 இடங்கள் என மொத்தம் 579 பி எட் பட்டப்படிப்புகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன. இதேபோல, எம்.எட். படிப்பிலும் காலியிடங்கள் உள்ளன.
ஏற்கெனவே, விண்ணப்பிக்கத் தவறிய மாணவா்களுக்கு, காலியிடங்களில் வாய்ப்பளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, பி.எட், எம்.எட். முதலாமாண்டுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு வசதி திங்கள் கிழமை (செப்.15) தொடங்கி செப். 30- ஆம் தேதி வரை தொடா்ந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாய்ப்பை பயன்படுத்தி மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ப்ஜ்ண்ஹள்ங்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.