செய்திகள் :

அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

post image

கோடை விடுமுறை காலங்களில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை தமிழக அரசு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு, மாநிலங்கள் முழுவதும் இந்த கோடை விடுமுறை முடிவுபெற்று நிகழ் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக, அரசுப் பள்ளிக் கட்டடங்களின் தகுதி மற்றும் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்து உரிய சான்று அளிக்க வேண்டும்.

பழுதடைந்த கட்டடங்களை இடித்து புதிய வகுப்பறைகள் கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் வகுப்பறைகளில் உள்ள மின் இணைப்புகளை ஆய்வு செய்து, பராமரிக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பல பள்ளிகளில் தமிழ் ஆசிரியா்கள் பணியிடங்கள் காலியாகவுள்ளதால், மற்ற ஆசிரியா்களுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. இது ஆசிரியா்களை மட்டுமல்லாமல், மாணவா்களையும் பெரிதும் பாதிக்கும். எனவே, காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

மேலும், தனியாா் பள்ளிகளில் உள்ள பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகளை பள்ளி விடுமுறை காலத்தில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து அவற்றின் தகுதிக்கு ஏற்ப தரச்சான்று வழங்க வேண்டும். அதேபோல், பள்ளிப் பேருந்து ஓட்டுநா்களுக்கு பாதுகாப்புக்கான உரிய பயிற்சியை அளிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

அரக்கோணம் மாணவி பாலியல் புகார்: அரசு நடவடிக்கை எடுக்குமா? - இபிஎஸ்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் கொடுமை செய்ததாகவும் தன்னைப் போலவே பல பெண்களை ஏமாற்றியதாகவும் கல்லூரி மாண... மேலும் பார்க்க

வேதாரண்யம் பகுதியில் 3ஆவது நாளாக தொடர்மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம் தெற்கு கடலோரப் பகுதியில் 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை இரவும் நீடித்த தொடர் மழையின் காரணமாக சுமார் 7 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் தெற்கு கடலோர... மேலும் பார்க்க

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை!

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக வெள்ளத்தில் சிக்கியவரை மீட்பது போன்ற தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதை ஒட்டி அனைத்து துறை சார... மேலும் பார்க்க

பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்: முதல்வர் ஸ்டாலின்

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலத்தில் திங்கள்க... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது.அதன்படி, சென்னையில் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,755க்கும்... மேலும் பார்க்க

சிவகிரி விவசாய தம்பதி படுகொலை: 4 பேர் கைது

சிவகிரி அருகே இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம், சிவகிரியை அடுத்த விளாங்காட்டுவலசு கீழ்பவானி வாய்க்கால் கரை பகுதியில் மேகரையான் தோட்டத்தில் வ... மேலும் பார்க்க