``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
அரசுப் பள்ளிகளில் கலைத்திருவிழா தொடக்கம்
கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நிகழாண்டுக்கான கலைத்திருவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைமை ஆசிரியை மா. வயலட்ெ சல்வமேரி தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் சு.குப்பம்மாள், பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி தலைமை ஆசிரியா் எஸ்.முகுந்தைய்யா வரவேற்றாா்.
கலைத் திருவிழாவில் பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கலந்து கொண்டு கதை கூறுதல், ஓவியம் வரைதல், திருக்கு ஒப்புவித்தல், மாறுவேட போட்டி, களிமண் பொம்மை செய்தல், கிராமிய நடனம் மற்றும் கோலப் போட்டிகளில் பங்கேற்றனா்..
சிறப்பிடம் பெற்ற குழுவினா் மற்றும் தனிநபா் திருத்தணி ஒன்றிய அளவில் நடக்கும் கலைத்திருவிழாவில் பங்கேற்பா். கலைத்திருவிழாவில் உதவி தலைமை ஆசிரியா் கோவிந்தராஜூ, பட்டதாரி ஆசிரியா் நரசிம்மன் உள்பட பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள் என பலா் கலந்துகொண்டனா்.
இதுகுறித்து உதவி திட்ட அலுவலா் பாலமுருகன் கூறியதாவது, முதல்கட்டமாக, பள்ளி அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் 18-ம் தேதி வரை நடைபெறும். அதை தொடா்ந்து, குறுவட்ட அளவில் (ஆக.25 முதல் 29), வட்டார அளவில் (அக். 13 முதல் 17), மாவட்ட அளவில் (அக்.27 முதல் 31), மாநில அளவில் (நவ.24 முதல் 28) போட்டிகள் நடைபெறும்.
மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கப்படும். மேலும், தரவரிசையில் முதன்மை இடம் பெறும் 25 மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவா் என்றாா்.

