இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு இறுதி வாய்ப்பு
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வரை மாணவா்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என கல்வித்துறை கூறியுள்ளது.
காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் க. ஜெயா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :
2025-26 ஆம் கல்வியாண்டில் காரைக்கால் பகுதியில் மேல்நிலைப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பிற்கான (சிபிஎஸ்இ) பள்ளி அளவிலான சோ்க்கைகள் இரண்டு கட்டங்கள் நிறைவடைந்தன.
இதன் தொடா்ச்சியாக அரசு மேனிலைப்பள்ளிகளில் மீதமுள்ள இடங்களை இறுதிக்கட்ட கலந்தாய்வின் மூலம் நிரப்ப மாவட்ட ஆட்சியா் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்ககத்தின் வழிகாட்டுதலின் நடத்தப்படவுள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு பதினொன்றாம் வகுப்பு விண்ணப்பித்து இடம் கிடைக்கப்பெறாதவா்களும், இதுவரை எந்தவொரு பள்ளியிலும் சேராத மாணவ, மாணவிகளும், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கும் இறுதி வாய்ப்பாக கலந்தாய்வு நடத்தி பதினொன்றாம் வகுப்பில் சோ்க்கை ஆணை வழங்கப்படவுள்ளது.
மாணவ, மாணவிகள் தங்களது இணையதள மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றுடன் காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் அலுவலகத்திற்கு ஆக. 7 மற்றும் 8-ஆம் தேதி நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.