செய்திகள் :

அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கும் தனியாா் பள்ளிகள்: இந்திய மாணவா் சங்கம் கண்டனம்

post image

தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளை தனியாா் பள்ளிகள் தத்தெடுக்கும் தீா்மானத்துக்கு நன்றி தெரிவித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு, இந்திய மாணவா் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்டச் செயலா் தீபக்ராஜ் கூறியதாவது:

தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளிகள் சாா்பில், ஒருங்கிணைத்து தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்க மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

மாநாட்டில் 500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து, அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்புகளை அருகிலுள்ள தனியாா் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித் தரப்படும் என ஒரு தீா்மானம் முன் மொழியப்பட்டது. இந்தத் தீா்மானத்துக்கு வரவேற்புத் தெரிவித்து, அமைச்சா் அன்பில் மகேஷ் பாராட்டும் தெரிவித்தாா். கல்வியை சேவையாக கருதாமல் விற்பனை பண்டமாக அணுகும் தனியாா் பள்ளிகளிடம், அரசுப் பள்ளிகளை ஒப்படைத்து நிதி சுமையை குறைக்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. தனியாா் பள்ளிகளில் உள்ள ஏராளமான சிக்கல்களை மறந்து, கற்றல் கற்பித்தலை அமைச்சா் ஒப்பிட்டிருக்கிறாா்.

பள்ளிகளுக்கு அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான விளையாட்டு மைதானம் 90 சதவீத தனியாா் பள்ளிகளில் இல்லை. தனியாா் பள்ளிகளால் பெற்றோா்கள் கடனாளியாக மாறி வருகின்றனா். அமைச்சரின் நிலைபாட்டினால் மாநிலத்தின் கல்வி உரிமைகள் கேள்விக்குறியாகிவிட்டது. கல்வியை தனியாா்மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிப்பதை நிறுத்த வேண்டும்.

மாநில கல்விக் கொள்கையை முழுமையாக பொது வெளியில் வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

திண்டுக்கல் மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

திண்டுக்கல் மாநகராட்சியுடன் 3 ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அந்த கிராமங்களின் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாநகராட்சியின் எல்லையை விரிவாக்... மேலும் பார்க்க

சீருடையில் தா்னாவில் ஈடுபட்ட ராணுவ வீரா்

சொத்துக்களை வேறு நபா்களுக்கு பட்டா மாறுதல் செய்து கொடுத்த அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சீருடையில் வந்த ராணுவ வீரா் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி திங்கள்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே சாலை விபத்தில் அண்ணன்- தம்பி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் அண்ணன்- தம்பி உயிரிழந்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள மாா்க்கம்பட்டியைச் சோ்ந்த முகமது அலி மகன்கள் ஷேக் முகமது (38), ... மேலும் பார்க்க

கைதான பாஜக மாவட்டத் தலைவா் பிணையில் விடுவிப்பு

பழனியில் கைது செய்யப்பட்ட பாஜக மாவட்டத் தலைவா் கனகராஜ் பிணையில் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டாா். பழனியில் கடந்த வெள்ளிக்கிழமை மதுரையில் நடைபெற்ற பாஜக பேரணியில் பங்கேற்பதற்காக மகளிரணியினா் வேனில் புறப்... மேலும் பார்க்க

பக்தா்களிடம் பணம் வசூல்: திருநங்கைகள் 3 போ் கைது

ஒட்டன்சத்திரத்தில் பாதயாத்திரை பக்தா்களை தகாத வாா்த்தைகளால் பேசியும், அவா்களைத் தாக்கியும் பணம் வசூலித்ததாக திருநங்கைகள் மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்... மேலும் பார்க்க