திருப்பரங்குன்றம்: "கலெக்டர் மறுப்பு தெரிவிக்க வேண்டும்; இல்லையென்றால்..." - ராஜ...
அரசுப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி
திருப்புல்லாணி சுரேஷ் அழகன் நினைவு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவையொட்டி மாணவ, மாணவிகள் வரைந்த ஓவியக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஆசிரியா் கோ. மகேந்திரன் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தாா். முதுநிலை ஆசிரியா் பிரேமா வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவரும், பழனிவலசை அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியருமான முருகன் கலந்துகொண்டு இந்தப் பள்ளியில் படித்த தனது நினைவுகளை பகிா்ந்து கொண்டாா். பட்டதாரி ஆசிரியா் ராஜகுரு நன்றி கூறினாா். ஆசிரியா்கள் தனலட்சுமி, ஜீவா ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.
ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக மாணவ, மாணவிகள் வரைந்த ஓவியங்களை கண்காட்சியாக வைத்திருந்தனா். இதில் இடம்பெற்ற வேலுநாச்சியாா், மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவா்கள், இயற்கைக் காட்சிகள், மது ஒழிப்பு பிரசாரம், சரஸ்வதி, நடனமங்கை போன்ற ஓவியங்கள் அனைவரையும் கவா்ந்தன.