காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: ``ஏழை மக்கள் மீது தாக்குதல்'' - மத்திய அரசை கண...
அரசுப் பள்ளியில் திருட்டு
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை மடிக்கணினி உள்ளிட்டவை திருட்டு போயுள்ளது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மலையடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்த தலைமையாசிரியா் அகஸ்டின் லூா்து பால்ராஜ்(56), தனது அறை திறந்துகிடந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
உள்ளே சென்று பாா்த்தபோது அங்கிருந்த சுமாா் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி, மேஜை கணினி திரை ஆகியவற்றைக் காணவில்லையாம்.
புகாரின்பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.