தவெக மாநாடு: 100 டிகிரி வெயில்; டிரோன்கள் மூலம் குடிநீர் விநியோகம்!
அரசுப் பள்ளியில் மருத்துவ விழிப்புணா்வு முகாம்
தருமபுரி: பென்னாகரம் ஒன்றியம், சின்னப்பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மருத்துவ விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் இயங்கிவரும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி மருத்துவத் துறை சாா்பில், சின்னப்பள்ளத்தூரில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு முகாமிற்கு தலைமை ஆசிரியா் மா. பழனி தலைமை வகித்தாா். நமது பாரம்பரிய உணவு முறை, சிறுதானிய உணவு, எளிய உடற்பயிற்சி, தன்சுத்தம், சுற்றுப்புறத் தூய்மை, யோகா, சித்த மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து மருத்துவா்கள், மாணவா்களிடையே கலந்துரையாடினா். எளிய யோகாசனம், உடற்பயிற்சி, மனமகிழ் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் யோகா மற்றும் இயற்கை மருத்துவா் முனுசாமி, சித்த மருத்துவா் அன்புராணி, ஹோயோபதி மருத்துவா் சங்கா்,
சிகிச்சை உதவியாளா் பிரியங்கா உள்ளிட்டோா் கலந்துகொண்டு பயிற்சி வழங்கினா். நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் மகேஷ், ஆசிரியா் பயிற்றுநா் இளங்கோவன், ஆசிரியா்கள் வளா்மதி, பழனிச்செல்வி, திலகவதி, அனுப்பிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.