2-வது டெஸ்ட்: ஷுப்மன் கில் 168* ரன்கள்; வலுவான நிலையில் இந்தியா!
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான மீளாய்வுக் கூட்டம்
புதுக்கோட்டையில் அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் பங்கேற்ற தோ்வு மீளாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினாா். புதுக்கோட்டை மாவட்டத்தில் குறைந்த தோ்ச்சி சதவீதம் பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் அதுகுறித்த காரணங்களையும், மேம்படுத்துவதற்கான யோசனைகளையும் தெரிவித்தனா்.
குறிப்பாக திருவரங்குளம், திருமயம், மணமேல்குடி ஒன்றியங்களைச் சோ்ந்த பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த அமைச்சா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ. நரேஷ், புதுக்கோட்டை மாநகராட்சி மேயா் செ. திலகவதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.