சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் மாநிலங்களில் 7 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
அரசுப் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்
துத்திப்பட்டு ஊராட்சி கன்றாம்பல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியா் ராபா்ட் ஜோயல் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். துணைத் தலைவா் விஜய் வாழ்த்திப் பேசினாா். ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணி, அண்ணாதுரை, பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
ஸ்மாா்ட் வகுப்பறை, கணினி வகுப்பறை ஆகியவற்றை பள்ளி மேலாண்மைக் குழுவினா் பாா்வையிட்டனா்.
மாணவா்களின் கற்றல் திறனை அதிகரிக்கச் செய்வதற்காக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மேலாண்மை குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஸ்மாா்ட் வகுப்பறையின் அவசியம் குறித்து பெற்றோா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.