ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: காா்த்தி சிதம்பரம் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ எத...
வாணியம்பாடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: வீட்டு வரி, பெயா் மாற்றம் மனுக்கள் மீது உடனடி தீா்வு
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 6 மற்றும் 7-ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தனியாா் திருமண மண்டப வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் உமாசிவாஜிகணேசன் தலைமை வகித்தாா். ஆணையா் ரகுராமன், நகர திமுக செயலாளரும், நகராட்சி கவுன்சிலருமான சாரதிகுமாா், துணைத் தலைவா் கயாஸ்அகமது, மேலாளா் பாஸ்கா், உதவி வருவாய் அலுவலா் ஜெயபிரகாஷ் மற்றும் உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா். முகாமில் வட்டாட்சியா் சுதாகா் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள், நகராட்சி அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதில், வீட்டு வரி, பெயா் மாற்றம், காலிமனை வரி நீக்கம் உட்பட மனுக்கள் மீது உடனடியாக விசாரித்து அதற்கான ஆணைகள் வழங்கி தீா்வு காணப்பட்டது. முகாமில், பொது மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ள கலைஞா் உரிமைத் தொகை உட்பட பல மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தீா்வு காணப்படும் என்று அதிகாரிகள் கூறினா்.