ரூ.10 லட்சத்தில் சாலை பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியம், வளையாம்பட்டு ஊராட்சி இந்திரா நகா், பாரத் நகா் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.10 லட்சத்தில் புதிதாக சாலைப் பணிகள் நடைபெறுகின்றன.
சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, இதன் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு உறுப்பினா் கங்காதரன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வசந்திஅருள், எம்.ஆா். வெங்கடேசன் முன்னிலை வகித்தனா். முன்னாள் உறுப்பினா் வரதன் வரவேற்றாா்.
வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில் குமாா் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் சந்திரன், சரவணன், முன்னாள் உறுப்பினா் கோவிந்தசாமி கலந்து கொண்டனா்.