Career: இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா... இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப வேலை...
அரசுப் பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 20 போ் காயம்!
சோழவந்தான் அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா்.
மதுரை மாவட்டம், சோழவந்தானில் இருந்து அண்ணா பேருந்து நிலையத்துக்கு அரசு நகரப் பேருந்து வெள்ளிக்கிழமை பகலில் புறப்பட்டுச் சென்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனா். பேருந்தை ஓட்டுநா் பிரேம்குமாா் ஓட்டிச் சென்றாா். சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் பகுதியில் உள்ள பள்ளிவாசல் அருகே சென்ற போது, பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து 10 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனா்.
இதைத் தொடா்ந்து அந்தப் பகுதியினா் உதவியுடன் சோழவந்தான் காவல் துறையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். விபத்தில் காயமடைந்த பயணிகள் சோழவந்தான் அரசு மருத்துவமனையிலும், மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து சோழவந்தான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.